Tuesday, February 21, 2017

அழகும் அழிவும் ....!

வானத்தில் மிதக்கும்போது மேகம் அழகு
மோதிக்கொண்டால் இடியும் மின்னலும்
வனத்தில் இருக்குபோது விலங்குகள் அழகு
பிடிபட்டுவிட்டால் கூண்டிலடைப்பு
கரைதொட்டு செல்லும்போது கடலலை அழகு
கரைதாண்டி வந்துவிட்டால் பேரழிவு
விளக்கில் ஒளிரும் தீபம் அழகு
பற்றிப்பிடித்து பரவிவிட்டால் சர்வநாசம்
உழைத்து வாழ்வது மானுடர்க்கு அழகு
பிறர் உழைப்பில் வாழ்வது சாபக்கேடு
பசிக்கு புசித்தால் ஆரோக்கியம் அழகு
கண்டதையும் உண்டால் பிணிமயம்

தனக்குப்போக தர்மம் செய்வது அழகு
கஞ்சத்தனம் பிடிப்பது பேரிழுக்கு
ஆடை அணிகலன் அனைவர்க்கும் அழகு
சிலைபோல் சாத்தினால் அருவெறுப்பு
நயம்பட பேசுவது தாய்மொழிக்கு அழகு
பிறமொழி கலந்துவிட்டால் பிழைமொழி
எல்லையுடன் இருந்தால் எல்லாமே அழகு
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

ராஜா வாவுபிள்ளை

No comments: