Wednesday, March 1, 2017

உகாண்டா ....! - ராஜா வாவுபிள்ளை

இந்த நூற்றாண்டின் முக்கிய சர்வாதிகாரி என்றறியப்பட்ட
ஈத் (இடி) அமீனை ஈன்றவள்....
அரேபிய பாலைவனம் படராமல் இருக்க
அரணாக இருக்கும்
நைல் நதியின் நதிமூலம் நிறைந்த நீர் வளத்தின் ஊற்று...
மா பலா வாழை என்ற முக்கனிகளும் வற்றாமல் யாவர்க்கும்
முத்தமிழையும் எனக்கு வருடம் முழுக்க தந்திடும் தாயகம்...
கடல் இல்லாவிட்டாலும்
கடல்போல் பரந்த விக்டோரியா ஏரியை தலையில் ஏந்தி நிற்கும் தடாகத் தாய் .....
வெள்ளையர்கள் சொன்ன இருண்ட கண்டம்
நான் கண்ட பச்சை பசேலென்ற இயற்கை போர்த்திய கண்டம்
திருந்தியபின் திட்டமிட்டு
முத்து போல ஒளிரும்
திருநாடு.....
மாறிவரும் உலகில்
மாற்றங்களை பெரும் விலைகள் கொடுத்து வாங்கி மாறி
வந்தாரை வரவேற்று வாழ்வளிக்கும் எங்கள் தாயம்மா ....
உகாண்டா ....


உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் எங்களது குழுமத்தின் அலுவலகம் ஒன்றிலிருந்து காண்பது தான் கம்பாலாவிலேயே உயரமான பலமாடி கட்டடம் இந்த காட்சி எப்போதுமே என் கண்களை கவரும். அதையே உங்கள் மேலான பார்வைக்கு வைக்கிறேன்.


இனிய மாலைப் பொழுதில் உகாண்டாவில் உள்ள மக்கள் இனங்களில் ஒன்றான டோரோ இனத்தவரின் பாரம்பரிய நடனத்தை கண்டு மகிழ்வுற்றதை நட்புகளுடன் பகிர்வதில் உவகை கொள்கிறேன்





படம்: உகாண்டாவின் தேசிய பறவை Uganda Crested Crane.


உகாண்டாவில் உங்கள் நண்பன் - ராஜா வாவுபிள்ளை

மேலும் படிக்க 

No comments: