Wednesday, March 8, 2017

வாட்ஸப் வேடிக்கை / பெரிய ஊழல்

நாம  போட்ட மேட்டர்
வாட்சப்ல போயி
பழையபடியும்
பேஸ்புக்ல வருது ...
எழுதினவன் பெயரில்லாம !
இதைவிட பெரிய ஊழல்
என்ன இருக்கு ?
-Abu Haashima

நீங்க வாட்ஸப்புலே போட்டது முகநூல்லெ வந்துச்சு. நான் முகநூல்லே போட்டது வாட்ஸப்புலே எனக்கே திரும்பி வந்துச்சே . அது எப்படி ? அப்ப உலகம் உருண்டைன்னு கலீலியோ சொன்னது உண்மைதானா?

அப்துல் கையூம்

நான் பேஸ்புக்லதான் போட்டேன்.
அது வாட்ஸ்ல போயி 
மீண்டும் 
எனக்கே வந்திருக்கு

 இதுக்கு பெயர்தான் வாங்கிஅடிக்கிறது


இதைத்தான் திருநெல் வேலிக்கே அல்வாங்கிறதோ?



ஊழல் இல்லை அது உங்கள் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி.

வார்த்தை திருட்டு பரவாயில்லை?! - நம்
வாழ்வையும், வளங்களையுமே திருடுறாங்க. . .
யுவர் ஹானர்!?

ஆனை சாப்பிடும்போது
கவளத்தின் சிறு துண்டு கீழே விழுந்தால்
எறும்புகள் சந்தோசமாகச் சாப்பிடும்

"நீங்க யானை" ண்ணே

இதுக்குபோய் கவலைப்பட்டுட்டு
பட்டினி கிடக்காதீங்க

எறும்புகளும் பிழைத்துப் போகட்டும்

எழுத்தை சுட்டவன் பாவம்.
நம்மீது அன்புள்ளவன்

No comments: