Wednesday, May 10, 2017

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா???


டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா??? - எழுதியவர். Shakila Kadher
"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம்.எனினும் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். (திருக்குர்ஆன்-7:10) என்பது இறைவாக்கு.


அப்படியானால் இந்த பூமியை. மட்டுமே மனிதர்கள் வசிக்குமிடமாக அமைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோளான சந்திரன் உள்ளது.

பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் மனிதர்கள் வசிக்க முடியாது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.

எங்கே பூமியில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை, பிராணவாயு நீர் ஆகியவை உள்ளதோ அங்கே தான் உயிர்கள் வாழ முடியும் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும்.

புதன் கோளில் காற்று மண்டலம் இல்லை.மற்ற கோள்களை விட இங்கு வெப்பம அதிகம். இந்தக் கோளின் அதிகபட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேட் பூமியின் ஈர்ப்பு விசையைப்போல் 3 ல் 1 பங்கு ஈர்ப்பு விசைதான் இங்கு உள்ளது. இதனால் இதில் மனிதனால் வாழ முடியாது.

வெள்ளி கோளில் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம நிலவுகிறது. இது பூமியின் வெப்பத்தை போல 11 மடங்கு அதிகம். இங்கு உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனும் இல்லை.

சூரியனிலிருந்து 23 கோடி தூரத்தில் உள்ளது செவ்வாய் கிரகம். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்ஸைடு செந்நிறமாகக் காட்டுகிறது. இதனால் இதற்கு செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது.

பூமியில் உள்ள காற்றில் 100ல் 1பங்கு காற்று தான் இதில் உள்ளது. அந்தக் காற்றில் கூடஒரு சதவீத அளவே ஆக்ஸிஜன் உள்ளது. எனவே இதிலும் மனிதன் வசிக்க முடியாது.




வியாழன் கோளிலும் மனிதன் வாழ சாத்தியக்கூறுகள் இல்லை. காரணம் இது புதன், வெள்ளி, செவ்வாய் மற்றும் பூமியைப் போல பாறைக் கோளாக இல்லாமல் வாயுக் கோளாக உள்ளது. இங்கு பூமியின் புவி ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது.இங்கு சென்றால் நம் எடை 2 1/2 மடங்கு அதிகரிக்கும்.நம் எடையை நாம் தாங்க முடியாத நிலை ஏற்படும்.

சனி கிரகத்தில் எப்போதும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் குளிர் உள்ளது.இங்கு வாழ்வதை மனிதன் கற்பனை செய்துகூட பார்க்க. முடியாது.யுரேனஸ், நெப்டியூன் , புளூட்டோ ஆகிய கிரகங்களிலும் கடுங்குளிரே நிலவுகிறது.

பூமியின் துணைக்கோளான சந்திரனிலும் மனிதன் உயிர் வாழத்தேவையான நீர், காற்று, புவி ஈர்ப்பு விசை எதுவும் கிடையாது.எனவே இங்கு மனிதன் குடியேற முடியாது.

பூமி வசிக்கும் இடமாக இருப்பது பற்றிய பல வியப்பான தகவல்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

உயிரினங்கள் வாழ வேண்டுமெனில் உடல் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு வெப்பம் இருப்பது அவசியமானது.

சூரிய ஒளிக்கற்றையில் அபாயகரமான மின் காந்தக் கதிர்கள் புற ஊதாக்கதிர்கள் அடங்கியுள்ளது.

சூரியனிடமிருந்து பெறப்படும் வெப்பம் நேரடியாக மனிதர்களின் உடலில் பட்டால் அவற்றிலிருந்து வெளிப்படுகின்ற புற ஊதாக்கதிர்களால் மனிதனும் பிற உயிரினங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஓசோன் எனும் படலத்தை பூமியைச் சுற்றி வளையம் போல் அமைத்தான் இறைவன் அது
மட்டுமல்ல, சூரியனின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி தக்க வைத்துக்கொள்ளக் கூடிய வளிமண்டலமும் பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.

மேலும் பூமி மட்டுமே சூரியனைச் சுற்றும்போது 23.4 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது.இப்படி சுற்றுவதால் தான் கோடைக்காலம், குளிர் காலம் வசந்தகாலம் என பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன.ஆண்டு முழுவதும் சீரான வெப்பமோ அல்லது குளிரோ இருந்தாலும் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.

மொத்தத்தில் மனிதன் வாழ்வதற்கு சாதகமான,வசதியான வாழ்விடம் அல்லாஹ் சொல்வது போல "பூமி " மட்டுமே.. !! சுப்ஹானல்லாஹ்.,. !!!
http://www.islamiyapenmani.com/

No comments: