Thursday, May 18, 2017

வாழ்த்துக்கள் ஆயிஷா பேகம் !

முகநூலில் மூழ்கி விடாமல் , இளமையை இழிவான மிருகங்களிடம் இழந்து விடாமல் , தனது தாயை இழந்த நிலையில் , ஏழைத் தந்தைக்கு உதவியாக சைக்கிளில் வியாபாரம் செய்து + 2 தேர்வில் 1101 மதிப்பெண்கள் பெற்ற தங்கை ஆயிஷா பேகம் .... வாழ்த்துக்கள் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியவில்லை ......

காதல் , அது இது என்று தன்னைப் பாழாக்கிக் கொண்டு வாழ்க்கையை இழந்து நிற்கும் பெண்கள் பெருகி வரும் சமூகத்தில் , குடும்பத்தின் நிலையறிந்து , வாலிபத்தின் மாய வலையில் விழுந்து விடாமல் தன்னைக் காத்துக் கொண்டு தனது குடும்பத்தையும் காப்பாற்றுகின்ற இப்படிப்பட்ட பெண் பிள்ளைகள் தான் இந்த நாட்டிற்குத் தேவை .... நிச்சயமாக இந்தப் பெண் சாதிப்பாள் , இந்த நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு வருவாள் , ஏழைகளுக்கு உதவியாக இருப்பாள் .... வாழ்த்துக்கள் அருமைத் தங்கை ஆயிஷா பேகம் .....
- Sampriya Kumar - ADSP - Tamil Nadu Police
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக! உங்கள் தாய் தந்தை மற்றும் குடும்பங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக .. மென்மேலும் சிறப்புகளையும் நல் ஆதரவுகளையும் , எல்லா வளங்களையும் பெற்று சிறப்போடு , மகிழ்வோடு வாழ நாங்கள் துஆ செய்கிறோம் ஆயிஷா பேகம் ! ...
- தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments: