Thursday, May 18, 2017

சொல்ல முடியாதுங்...

பாத்தரம் கழுவறது கூட்டித் தொடைக்கறது சுத்தம்பண்றது எல்லா வேலயும் பாப்பனுங்
ஒன்பது மணிக்கு வந்துரணும்மா
இல்லீங்,பத்து மணிக்கி வந்துருவனுங்.
இல்லம்மா,கம்பனி டைம் ஒன்பது மணிதான்
அந்தாளு படுத்துக் கெடப்பானுங்,புள்ளகள பள்ளிக்கோடமனுப்பீட்டு அந்தாளு கெளம்பனவுன்ன வந்திருவங்
யாரும்மா அந்தாளு
புருசங்காரந்தாங்
ஓ....புருசனா என்ன வேலை பாக்கறாரு ?

அந்தாளுக்கு வேலவேற கேடா,நல்லா தின்னுபோட்டு சரக்கடிச்சுட்டு என்னப்போட்டு அடிக்கறதுமும் பணங்கேட்டு உசிர வாங்கறதுந்தாங் வேல
காசு நீ ஏம்மா கொடுக்கற ?
குடிக்கலீன்னா ரோட்டுல போட்டு அடிப்பானுங்கந்தாளு மனுசத்தனமாவே நடந்துக்க மாட்டனுங்
பேசாம நீ உங்கம்மா வூட்டுக்குப் போலாம்,இல்லேன்னா விவாகரத்து வாங்கிக்கலாமே
அங்க நம்மள சொமையாத்தானோ நெனப்பாங்க,புருசனில்லீன்னா கண்ட நாயுமும் நாக்கத்தொங்கப்போட்டுட்டு வூட்டுக்குள்ள நொழையுமல்லோ,அப்றம் புள்ளய்களுக்கு அப்பன்னு கைகாட்ட ஒருத்தன் வேணுமல்லோ.சாகற வரைக்கும் இருந்து தொலையட்டுமுங்...
அப்பறம் ராத்திரி ஏழுமணிக்குள்ளாற அனுப்பீருங்கோ.
லேட்டாப்போனா எவங்கூட ஊரு மேஞ்சுட்டு வாரடீன்னு ரோட்டுல போட்டு அடிப்பானுங்கோ அந்த கெரகம் புடிச்சவன்.எழவெடுத்த தண்ணியப் போட்டுட்டு படுத்தற பாடு சொல்ல முடியாதுங்...என்னபண்ணித் தொலையறதுன்னு புள்ளய்களுக்கொசரம் பல்லக் கடிச்சுட்டு குடும்பம் நடத்தீட்டிருக்கனுங்....#BanTasmac
.நிஷா மன்சூர்

No comments: