Sunday, June 18, 2017

தலைமுறை இடைவெளி

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனக்கும் தந்தைக்கும் 47 வருட வயசு வித்தியாசம். நான் அடிக்கடி சொல்வேன் தலைமுறை இடைவெளி என்று ஆனால் என் மீது அவர் பொழிந்த பாசமும் அன்பும் மிகையானது.
என்னை 6 ம் வகுப்பில் விடுதியில் சேர்த்தார் 10 ம் வகுப்பு வரை விடுதி வாழ்க்கை அதற்கு பிறகு தந்தையுடன் கல்லூரி வரை ஆனால் தாய் ஊரினில். 8 ம் வகுப்பு வரை படித்து அதற்குப்பின் கொழும்பில் இரவு வகுப்பு படித்து தனது ஆங்கில அறிவையும் பட்டை தீட்டிகொண்டவர். அரசியல், ஆன்மிகம், கலை என்று அனைத்து துறையிலும் சரளமாக உரையாடுவார் ஓர் குறிப்பிட்ட காலம் வரை இடது கம்யுனிஸ்ட், அய்யா கல்யாண சுந்தரம் , KT ராஜு , பாப்பா உமாநாத் என்று அவர் வட்டம் தீவீரமானது . SAS என்று செல்லமாக அழைப்பார்கள் அவரது காலம் வரை பொருளுக்குக்காக அவர் தன்னை மாற்றி கொண்டதில்லை.

தலைமுறை இடைவெளி என்றாலும் எனக்கும் அவருக்குமான புரிதல் மிகையானது. கல்லூரி படிக்கும் காலம்வரை அவர் எனக்கு நண்பனாகவே இருந்தார் எனது நட்புக்கள் அனைவரும் தந்தையுடன் பேசுவதை மிகவும் விரும்புவார்கள் என்னிடம் பழகுவதைவிட அவர்களிடம் மிகவும் பாசமாக இருப்பார். வீட்டில் என்னை பார்க்க வந்தால் கையை நனைக்காமல் அவர்கள் செல்வது கடினம்.
தனது வேலைகள் அனைத்தும் 75 வயது வரை அவரே செய்வார் தனது துணிகள் துவைப்பது உட்பட எனதையும் சேர்த்தே துவைப்பார் காலையில் எனக்கு வேலைகொடு இதுவே அவர் . காலை எழுந்தால் 9 மணிவரை தன்னை தொடர்ந்து வேலைகள் என்று உயிர்ப்பாக வைத்திருப்பார். அவரது தன்மையில் , பாசத்தில் , நேசத்தில், சொல்லில் அனைத்திலும் அவரில் நான் 10% கூட இருக்கமாட்டேன்.
அவரது நண்பர் வட்டத்தில் சகோதர சமுதாயத்தினரே அதிகம் அவரது வியாபார தொடர்புகளில் சகோதர சமுதாயத்தவரே அதிகம். தினமும் இறைமறையோடவே அவரது நாட்கள் தொடங்கும் இரவில் முடியும்.
சுதந்திரம் என்றால் எப்படி இருக்கும் என்று வாழ்வில் சுதந்திரத்தை முழுமையாக எனக்கு அளித்தார் ஓர்முறை தொடர்ந்த இருமல் எனது தாயிடம் சொல்லி அவன் புகைபிடித்தால் விட்டுவிட சொல் எதற்கு கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார். நான் கல்லூரி இரண்டாம் வருடம் வரை புகை பிடிப்பதுண்டு அதற்கு பின் இல்லை.
என்னிடம் சொல்வார் எங்களது காலம் வேறு உங்களது காலம் வேறு என்று சரியான சொல் இன்று பொருளுக்காக நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் இறைவனின் அருள் ஒன்றே போதும் என்று அவர் வாழ்ந்து சென்றுவிட்டார்.
என்னிடம் தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கிறதென்றால் அது அவர் ஊட்டியது நாளை என்று ஒன்றை அவர் நினைத்தது கிடையாது ஆனால் நாளை ஒன்றையே குறிவைத்து எனது பயணம்.
இறைவன் அவரது நற்கிரியைகளை பொருந்தி கொள்ளட்டும்.



Sheik Mohamed Sulaiman

No comments: