Thursday, August 31, 2017

பேஸ்புக்கைத் திறந்தால்

Abu Haashima
பேஸ்புக்கைத் திறந்தால்
#ரோஹிங்கியா  முஸ்லிம்களின்
மரணம் தோய்ந்த முகங்கள் நெஞ்சைக் கீறிக் கிழிக்கின்றன.
அவற்றைப் பார்த்துவிட்டு
வேறு பதிவுகள் போடுவதற்கு
மனம் ஒப்பவில்லை என்பதால்
இரண்டு நாட்களாக
எதுவும் எழுதத் தோன்றவில்லை !
பெருநாளில் கூட
ஆர்வமில்லை.
ஒரு நேரப் பசிக்கும்
ஓரிரவு மின்வெட்டுக்கும்
சில கொசுக்கடிகளுக்கும்
ரொம்பவே அலுத்துக் கொள்கிற
சொகுசான வாழ்க்கைக்கு
நாம் பழகி விட்டோம்.

நிலைத்திடும் புது வாழ்வு ....!

நிலைத்திடும் புது வாழ்வு ....!
விடியலில் விளைந்த
இளமை நிலைக்குமென
காலமெல்லாம் களித்திருந்து
வாலிபம் வந்ததும்
கற்றுத்தேர்ந்த வித்தையை
உழைப்பில் முறுக்கேற்றி
அறிவால் மெருகேற்றி
வியர்வையால் சுத்தப்படுத்தி
வாழ்வை மேம்படுத்தி
வளர்ந்து முதிர்ந்ததும்

Wednesday, August 30, 2017

ஒரு அனுபவக் களஞ்சியத்துடனான சந்திப்பு...!

by Samsul Hameed Saleem Mohamed
எங்கள் நீடூர்- நெய்வாசல் "சீசன்ஸ்" முஹம்மது அலி BABL அவர்கள் ஒரு வழக்கறிஞர் என்பதைக் கடந்து சமூக நோக்கம் கொண்ட நற்சிந்தனையாளர் மற்றும் நல்ல எழுத்தாளர்! அந்த காரணத்தினாலேயே எனது மானசீக மற்றும் மரியாதைக்குரிய ஆசிரியர்!
இன்று அவரை அவரது ஜின்னாஹ் தெரு இல்லத்தில் சந்தித்து அளவளாவியதில் அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு!
நேற்றைய தினம் மெசேன்ஜரில் கேட்டேன் நீங்கள் எத்தனை மணிக்கு வீட்டில் இருப்பீர்கள்! உங்களை வந்து சந்திக்க விரும்புகிறேன் என்று! உன் வருகைக்காக காத்திருக்கிறேன் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் என்னை வந்து பார்! என மிக உரிமையுடன் சொன்னதும் இன்று காலை பதினோறு மணியளவில் அவரை சந்தித்தேன்!

Tuesday, August 29, 2017

ஆட்சித் தலைவர்

By. Vavar F Habibullah


மக்கள் மனதில் ஆட்சி புரிவது என்பது ஒரு வரம்.இது ஒரு சிலருக்கு மட்டுமே இறைவன் வழங்கிய அருட்கொடை.
குமரி மாவட்டம் - மண்டைக்காடு கலவரங்களின் பிண்ணணியில் சிதறுண்டு கிடந்த போது அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஒரு துடிப்பான இளைஞரை குமரி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்ய விரும்பினார். முதல்வரின் நேரடிப் பார்வையில் மாவட்டத்தை மத நல்லிணக்க மாவட்டமாக மாற்றியமைக்க அரும்பாடு பட்ட அந்த இளைய, அந்த நாள் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தான் முனீர் ஹோடா IAS
சிஎம்டிஎ தலைவர், உள்துறை செயலாளர் மெட்ரோ ரயில் தலைவர், மாநில தேர்தல் ஆணையர் போன்ற பெரிய பதவிகளில் அமர்ந்த போதும் மாவட்ட கலக்டர் என்ற சிறப்புப் பெயரில் இன்றும் மாவட்ட மக்களால் அறியப்படுபவராக இவர் இன்றும் திகழ்கிறார்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற சில நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்த பெருமை இந்த அதிகாரியின் நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே சக அதிகாரிகள் கருதினர்.
முதல்வர் கேட்டுக் கொண்ட பின்னரும் பதவியில் தொடர இவர் விரும்பவில்லை.

Monday, August 28, 2017

சிரிப்பே வராதவர்கள் முயற்சிக்கவும்.

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.
நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.
பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.
அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.
கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..?
என்ற குழப்பம் உண்டாகியது..

Sunday, August 27, 2017

நீட் தேர்வும் பிளாஸ்டிக் சர்ஜனும்


நாகர்கோவில் நகரை சார்ந்த தொழில் நகரம் கோட்டாறு.கோட்டாறை சார்ந்த மாணவர்கள் படிப்பு தேவையை நிவர்த்தி செய்த பள்ளிக்கூ டங்களில் ஒன்று தான் இடலாக்குடி அரசு பள்ளி.சாதாரண பள்ளிக்கூடம் தான் அது.
ஆங்கில அறிவு மாணவர்களுக்கும் கிடையாது, ஆசிரியர்களுக்கும் அறவே கிடையாது.
சாதாரண நாட்டுத் தமிழில் தான் பாடம் நடக்கும்.
இத்தகைய சூழலில் வளர்ந்த ஒரு தமிழ் மாணவன் தமிழ் பள்ளியில் படித்து MBBS பட்டம் பெற்று பின்னர் FRCS பட்டம் பெற்று அமெரிக்காவில் லோஸ் ஏன்ஜலெஸ் நகரில் குடியேறி அமெரிக்கன் போர்டு பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் ENT துறையில் பட்டம் வென்று பிரபல மருத்துவராக தொழில் புரிவது என்பது சாதாரண விசயமல்ல.

Saturday, August 26, 2017

கதையல்ல உண்மை...!

சவுதிஅரேபியாவின் பாலைவனப் பகுதியில்
சூடான் நாட்டைச் சேர்ந்த யூசுஃப் என்ற நபர்
ஒரு அரபியின் ஆட்டுப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்து
ரோட்டின் புறவெளிப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்
அப்போது அந்த வழியாக காரில் வந்த காட்டரபிகள் சிலர்
(பாலைவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சற்று ஏழ்மை நிலையில் வசிக்க கூடியவர்கள்)
யூசுஃப்பை பார்த்து எனக்கு ஒரு ஆடு வேண்டும்
(சுமார் 1000 ரியால் மதிப்புள்ள ஆட்டை)
நான் உனக்கு 200 ரியால் பணம் தருகிறேன்
உன் முதலாளிக்கு தெரியாமல் எனக்கு ஒரு ஆட்டை எடுத்து தருகிறாயா என்று கேட்டனர்
அதற்கு அந்த யூசுஃப் இல்லை என்னால் முடியாது
நான் என் முதலாளிக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறுகிறார்.

தமிழ்நெஞ்சம் அமின் வாழ்க!

by பாட்டரசர் கி. பாரதிதாசன் 
கன்னல் கவியழகில் காதல் பெருக்கெடுத்து
மின்னும் தமிழ்நெஞ்சம் இன்னமினார்! – மன்னுபுகழ்
பின்னும் நிலையுறுக! பேறுகள் பெற்றோங்கி
இன்னும் கலையுறுக ஈங்கு!

அன்பின் பெருக்கால் அனைவரையும் ஆட்கொள்ளும்
இன்பத் தமிழ்நெஞ்சம் எம்அமினார்! – நன்வாழ்கை
அன்னை மொழியேந்தும்! முன்னை நெறியேந்தும்!
பொன்னை அகமேந்தும் பூத்து!

Friday, August 25, 2017

விழிப்புணர்வு நேரமிது!

பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம் என்கிற பெயரில் யாரும் எதை வேண்டுமானாலும் செய்து மக்கள் நலனையும், நாட்டு நலனையும் காற்றில் பறக்கவிட்டுக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், விலைபோகாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்கிற மனோநிலையும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் அதைவிடப் பெரிய ஆபத்தாகத் தெரிகிறது.

Wednesday, August 23, 2017

வேலை தேடுவோருக்கு .....

இஸ்கந்தர் பராக் Iskandar Barak

கத்தார் ...விசா ப்ரி விசிட்டில் வந்து தங்கி வேலை தேடி விடலாம் எதற்கு நமது நாட்டில் நடக்கும் இண்டர்வியூ போன்றவற்றில் பங்கேற்கவேண்டும் ஏஜென்ஸிக்கி பணம் கட்ட வேண்டும் ..யென நினைக்கும் நண்பர்களுக்கு எனக்குத்தெரிந்த யோசனை இதோ ...
வேலையில்லை தேடினாலும் கிடைக்கவில்லை வீட்டில் சிரமம் தந்தையார் வருமானம் போதவில்லை நானும் படித்து விட்டு சும்மாயிருப்பது மனசுக்கும் வீட்டுக்கும் பாரம் ஏஜென்சிகளை நம்பி போய் பணம் கட்டுவதும் இப்போதைய காலத்தில் முடியாத காரியம் கட்டினாலும் கொண்டுட்டு எஸ்கேபாயிடுராங்க ....இந்த நிலையில்
தற்போது கத்தார் நாடு தன் பாதையை விசாயில்லாது திறந்து விட்டிருப்பதை பயன்படுத்தி சென்று வேலை தேடிவிடலாமென ஈஸியாக நினைப்பு வருவது சகஜம் தான் ...காரணம் மனசும் சூழலும் நமக்கு அப்படித்தான் தோண வைக்கும் நினைக்க வைக்கும் ............அதே நேரம்
அதிலுமுள்ள லாப நஷ்டங்களையும் சிரமங்களையும் கணக்கிலெடுக்க தெரியாதோருக்கு இந்த விளக்கம் துணை புரியலாமென்பதால் சொல்கிறேன் .........அன்பர்களே

நீங்க லால்பேட்டை காரருனு தெரிந்து இருந்ததால் இது நடந்து இருக்காது....

.
*ஹோட்டல்"*
SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?
costumer : தோசை வேணும்.
SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?
costumer : வெங்காய தோசை.
SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?
costumer : சின்ன வெங்காயம்.
SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?
costumer : நாட்டு வெங்காயம்.
SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?
costumer : சின்னதா நறுக்குனது.

Tuesday, August 22, 2017

குறிக்கோள் + நம்பிக்கை + முயற்சி = வெற்றி



வாழ்க்கையில் முயற்சி, நம்பிக்கை, குறிக்கோள் இந்த மூன்று வார்த்தைகளில் உள்ள முக்கியத்துவத்தை பற்றி கொஞ்சம் அலசிப்பார்போம். நாம் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இந்த வார்த்தைகளை நம் வாத்தியார் / பெற்றோர் / உற்றார் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் எத்தனை பேர் கடைபிடித்தோம்? எத்தனை பேர் இவர்களுக்கு வேற எந்த வேலையும் கிடையாது என்று ஏளனம் பேசியிருப்போம் என்று நம் மனசாட்சியை கேட்டால் புரியும். ஆனாலும் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் இதை நிச்சயம் உணர்ந்து இருப்போம்.

இஸ்லாமியத் திருமணம் தொடர்…

ஓ மனிதர்களே!

உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், இவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்: ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைத் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தத்தமது உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள்) மேலும் (உங்கள்) இரத்த பந்தங்களையும் ஆதரியுங்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

(இது எல்லாத் திருமண (பிரசங்கம்) குத்பாவிலும் ஒதுப்படும் இறைவசனமாகும்)

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையற்ற நற்குணமுள்ள) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)

மனிதனை பார்ப்போம்....மனிதத்தை மதிப்போம்.

- இஸ்கந்தர் பராக் 
மனிதர்களுக்கு உதவுவோம்..இறைவன் நமக்கு உதவுவான் சற்று முன் இதோ..
கடந்த இரண்டு ஆண்டுகளாய் எனக்கு டிரைவராய் வேலை செய்து வந்த இலங்கை குருநாகலைச்சேர்ந்த சிங்களப்பையனை கத்தார் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கம்பெனி கடந்த மாதம் செய்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் இவர் பெயரையும் சேர்த்து இம்மாதம் கடந்த 7 ம் தேதியோடு வேலையை நிறுத்தச்சொல்லி ஆர்டர் போட்டு விட்டது
நல்ல பையன் சிங்களமாயிருந்தா நமக்பென்ன ..
யாராயிருந்தாலும் மதம் மொழி நாட்டுக்கப்பால்பட்டு மனிதமே முதலில் ...யென்பதால்

உழைப்பு ....!

பணியில் கிடைக்கும் பலனை
பணத்தில் கூட்டும் தர்மம் - உழைப்பு
திறமையில் மிளிர்ந்து வடிவாய் காட்டும்
உண்மையாய் வியர்வை சிந்தும் - உழைப்பு
படிப்பில் கிடைத்த அறிவை
தொழிலில் காட்டும் வித்தை - உழைப்பு

வாழ்க்கை ஒளிமயமாக அமைய ,,,

உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்
எல்லாவற்றையும்
குறித்து வைத்துக்
கொள்ளுங்கள்.
பழிவாங்கிட அல்ல,
தப்பித்தவறி கூட அதே
தவறை இன்னொருவருக்கு
செய்து விடக்கூடாது என்பதற்காக...
யாரையும் பரிகாசமாக பார்க்காதீர்கள்.
அவர்களிடம் கற்றுக்
கொள்ள வேண்டிய
விஷயம் ஏதாவது
ஒன்று கண்டிப்பாக
இருக்கும்.

Monday, August 21, 2017

"பசுமை நிறைந்த நினைவுகளே....பாடிப் பறந்த பறவைகளே "

எங்கள் காலத்தில் கல்லூாி பிாிவு உபசார தினத்தில் (College Farewell Day) அன்று இறுதியாக ரத்தத்திலகம் என்ற படத்தின் "பசுமை நிறைந்த நினைவுகளே....பாடிப் பறந்த பறவைகளே "...என்ற பாடல்களே பெரும்பால கல்லூாில் வேதனை கீதமாக முழங்கும். Pin drop silent என்பாா்களே அதுவும், பின் விசும்பலில் ஆரம்பித்து கதறலில் வெடிக்கும் வேதனை...அங்கிருக்கும் அனைவருக்கும் தொற்றிக் கொள்வதை காணலாம்.
சற்று நேரத்திற்கு முன், எனது புத்தக அலமாாியில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படித்த போது, இதே அா்த்தத்தில் உள்ள, " நச் "என்ற நாலு வாிக் கவிதையை படித்த போது...நெஞ்சை நெருடிய பிாிவின் வலி தோன்றிய தென்றால் , அது மிகை இல்லை.
அந்த மாணவி இதை எழுதி முடிப்பதற்குள், எத்தனை வேதனை அடைந்திருப்பாள்..!

உங்களின் எந்தக்கவிதை உங்களை அடையாளப்படுத்தியது?

உங்களின் எந்தக்கவிதை உங்களை அடையாளப்படுத்தியது?

உயிர் எழுத்து இதழில் வெளிவந்த முத்தங்களின் இரகசியங்கள்” என்ற கவிதை என்னை கவனப்படுத்தியது என்று நினைக்கிறேன் .
- சக்திஜோதி

“என்னை முத்தமிடுகையில்
உனது பிரச்சினை
என்னவென்பது
எப்பொழுதும் புரியவில்லை

மிச்சில்

==ரமீஸ் பிலாலி==

மிச்சில்

மதிய மழைத்தூறலின் துளிகள்
ஒவ்வொரு இலையிலும்
ஒவ்வொரு நீல மொக்கிலும்
மினுங்க நிற்கிறது
வீடளவுயர்ந்து நிற்கும் எருக்கஞ்செடி

மேற்கு வானத்து
மேக விளிம்பெல்லாம்
வெள்ளியெனச் சுடரும் தண்ணொளி
சூரியனே நிலாவாகிவிட்டது போல்

நீர் வார்த்த வானம்
தருக்களுக்கெல்லாம்
ஒளியினைப் பரிந்தூட்டுகின்றது

தேனால் செய்தன போலுமாய்க்
காலத்தின் அடையில் இத்தருணங்கள்

பெருநதிகள் மட்டும் பெருகின்ற பேறு
சாலைக் குழிநீரும் காணும் கருணை

பேசும் வார்த்தைகள் உதட்டளவில் இல்லாமல் இதயத்திலிருந்து வர வேண்டும்


பேச்சு என்பது வார்த்தைகளின் குவியல் அல்ல. பூக்களை அடுக்கி அடுக்கிக் கட்டப்பட்ட மாலை போல அது அழகாக இருக்க வேண்டும். அடுக்கிய புத்தகங்களைப் போல் முறையாக இருக்க வேண்டும்.

அழகு, அறிவு, திறமை, பதவி போன்ற நற்பண்புகள் வாழ்க்கைப் பயணத்தில் பலம் சேர்க்கலாம். இப்படிப்பட்ட பலங்கள் இருந்தும்கூட பலர் வெற்றியைத் தவற விட்டுவிடுகிறார்களே, என்ன காரணம்? வேறொன்றுமில்லை. அவர்களுடைய எண்ணங்களைச் சரிவர வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியவில்லை.

Sunday, August 20, 2017

சிந்துநதிக் கரையினிலே...! – ஒரு புதிய வாசிப்பனுபவம்

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தபோது அதே போல முஸ்லிம்களின் வரலாற்றையும் நாவலாக அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் யாராவது எழுதியிருக்கலாமே என்று எனக்குத் தோன்றியிருக்கிறது.
ராஜராஜ சோழன் தனக்கு உரிமையான அரச பதவியைப் பெருந்தன்மையுடன் துறந்த வரலாற்றுடன் பல்வேறு இடங்களில் கிடைக்கப் பெற்ற செப்பேடுகள், சுவடிகள், கல்வெட்டுகளை அடிப்படையாக வைத்து அமரர் கல்கி அவர்களின் அபார வர்ணனையிலும் புனைவுகளிலும் உருவான பொன்னியின் செல்வனைப் போலவே,   தனது பதின்ம வயதை நிறைவு செய்யும் முன்னதாகவே இந்தியாவின் பெரும்பகுதியை நிர்வகித்த வீரம், நிர்வாகத் திறமை, இறைநம்பிக்கை இவற்றை ஒருங்கே கொண்டிருந்த முதல் முஸ்லிம் இளம் தளபதி முகமது பின் காசிம் பற்றிய வரலாற்றை, சீரிய முறையில் நாவல் வடிவில் சர் எல்லியட், ஜான் டௌசன் என்ற ஆங்கிலேய சரித்திரவியலாளர்கள் இருவர் எழுதிய "The History of India as told by its own Historians ", "The Cambridge History of India "  என்ற சரித்திர புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சிந்துநதிக்கரையினிலே’ எனும் வரலாற்று நாவலை அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர் ‘ஹசன்’ (ஸய்யித் முஹம்மது) அவர்கள்.
கல்கியால் உந்தப்பட்டு எழுத ஆரம்பித்ததாலோ என்னவோ வர்ணனைகளும், சரித்திர காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்வதிலும் கல்கியின் பாணி வெளிப்பட்டுள்ளது. நான் படிக்கும்போது கதாபாத்திரங்களைப் பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்களோடு இயல்பாகவே பொருத்திப் பார்த்தது உள்ளம்.

உன்னைப் புகழ்வதற்கு வார்த்தைகளைத் தேடுகிறேன்..

என் 
கலையார்வத்தை
கொண்டாடித் தீர்க்கும்
உன்னைப் புகழ்வதற்கு
வார்த்தைகளைத் தேடுகிறேன்..
என்
எழுத்துக்களின் 
ஒவ்வொரு வரிகளையும்
ஆராய்ந்து நீ என்னிடமே
விளக்கும்போது நான்
மெய்மறந்தே போகிறேன்..
என்னுயிரே
இப்படித்தான் 
உன்னைப்பற்றி
எழுத நினைக்கிறேன்..

Saturday, August 19, 2017

ஹாஹாஹாஹா...

Iskandar Barak
ஹாஹாஹாஹா...
நேத்து ராத்திரி நம்ம பசங்க புட்டு செய்ரோம் அண்ணே நீங்க வெயிட் பண்ணுங்கனு சொன்னாய்ங்க வீரப்பனும் தேவந்திரனும்.
சரி ரெம்ப நாளாச்சே சாப்டலாமேனு நினைச்சு வெயிட்டிங் பண்ணேன்
நம்ம டைம் அவங்களுக்கு தெரியுமே ..கரெக்டா கொண்டாந்து கொடுத்தாங்க
புட்டும் அதுக்கு சால்னா வும்.
அப்ப பாத்து வீட்டுக்காரம்மா போன் பண்ணுச்சா ....விபரம் சொன்னேன் வீடியோவுல காட்டுனேன் புட்டையும் கொழம்பையும்
புட்டுக்கு கொழம்பா .....இதுக்கு சோறே சாப்டலாம்ல இதுக்கெதுக்கு மெனக்கெட்டு செய்யனும்னு கேட்டுச்சு
ஏன் ..னு கேட்டேன்

வேலை தேடுதல் ...அனுபவ வழிகாட்டி பதிவு இது.

வேலையின்மையும் ..வேலை தேடுதலும் அந்த கால நிலையும்....இதோ அனுபவித்தவன் யென்ற முறையில் சில அனுபவங்கள் உங்களுக்காக....2004
ப்ரி விசா வில் சென்றுள்ள நான் ...வேலை தேடவேண்டுமெனில் முதலில் இகாமா யெனும் ஒர்க் பர்மிட் வேண்டும் ....யென்பதால் அதற்காக வெயிட்டிங் செய்து உறவினர் ரூம்பில் ...
நாட்கள் நகர நகர மிகுந்த சிரமத்தை தரும் நேரம் அது மூன்று நாட்கள் பொறுத்த நான் முடியவில்லை சரி ..இகாமா வரட்டும் பார்க்கலொமென்ற முடிவில் வேலை தேடி வெளியேறினேன் ...தெரிந்த நண்பர்கள் உறவினர்களிடம் சொல்லி வைத்ததில் ஒருவர் போன் செய்தார்
மச்சான் ஒரு வேலயிருக்கு வந்து பேசுரிங்களாயென்று ......உடனே போனேன்

எப்படித்தான் இருக்குன்னு பாக்கலாம்னு ஒரு பார்க்குல புகுந்தேன். அங்கே....

இங்கே இருக்கிற பார்க்குகளில் புதுசா ஒரு விஷயம் கொண்டு வந்திருக்காங்க. ஒரு ஜிம்மில் இருக்கக்கூடிய விதவிதமான உடற்பயிற்சி சாதனங்களை வச்சிருக்காங்க. நான் வசிக்கிற பகுதியைச் சுத்தி நாலு பார்க்குகளிலும் இருக்கு. திறந்தவெளியில்தான். யார் வேணாலும் போய் எக்சர்சைஸ் செய்யலாம். (காலை-மாலை நேரத்துல ஹரியாணா ஜாட்டுக - ஆண்களோ பெண்களோ யாரா இருந்தாலும் - நமக்குக் கிடைக்காது.) சரி. அது இருக்கட்டும்.

அந்த பெண்மணி புர்காவை போட்டு வந்த போது எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்..

முகம் முழுவதும் மறைக்கப்பட்டிருந்தது..

அவர் பெயர் ஹான்ஸன்..ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்.

ஆஸ்திரேலியாவில் புர்காவை தடைச் செய்ய வேண்டும் ..என்று நாடளுமன்றத்தில் சொல்லி தன் முகத்தை மூடியிருந்த துணியை உருவி எடுத்தார்..

எல்லோரும் பாராட்டுவார்கள் என எதிர்பார்த்தார்..ஆனால் நடந்ததோ..!?

இந்த செயல் பிடிக்காத அட்டர்னி ஜெனரல் எழுந்தார்..அருமையான விளக்கம் ஒன்றை உடனடியாக கொடுத்தார்..

தடவல் இல்லையேல் வாழ்க்கை இல்லை

கழிந்த வாரம் என்னுடன் வேலை செய்யும் COMPANY நண்பர் பக்கத்தில் எனக்குதெரிந்த ஒரு நண்பர் இருக்குறார் வா பார்த்து விட்டு வரலாம் என்று கூப்பிட்டார் சரிபோகலாம்
என்று உடன் சென்றேன்.
DOUBLE BEDROOM FLAT,HALL லில் ஒருவர் அமர்ந்திருந்தார் பஞ்சாபிகாரர் T Vயில் ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருந்தது அவர் கையில் ஒரு ANDROID PHONE அவரை GREET செய்துவிட்டு முதல் அறையில் நுழைந்தோம்
அங்கே இருவர் MAHARASHTRA காரர் அங்கும் T V யில் ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருந்தது

நஸ்ருல் முஸ்லிமீன் என்ற பெயரிலேயே எனக்கு ஒரு மரியாதை இருக்கிறது.

என் மூன்று பிள்ளைகள் லண்டன் யுனிவர்ஸிட்டியில் படிக்கிறார்கள் என்றால்.. அவர்கள் மூவருமே இந்த ஸ்கூலின் முன்னாள் மாணவர்கள்.
மகன் ஒன்பதாவது வரையிலும், மகள்கள் ஐந்து, ஆறு, வகுப்பு வரை யிலும் இங்கு தான் படித்தார்கள். (இந்த ஸ்கூல் துவக்கத்தில் நீடூர் ரைஸ்மில் தெருவில் இயங்கி வந்தது).
என் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வியையும், அறிவையும் தந்த இந்த பள்ளி கூடத்தையும் , ஆசிரியர்களையும் , நான் நன்றியோடு நினைவு கோருகிறேன்.
ஆரம்ப கல்வி சரி யாக இல்லை எனில் அவர்கள் இந்த நிலையில் எத்தியிருக்க வாய்ப்புகள் மிக குறைவு.
நஸ்ருல் முஸ்லிமீன் என்ற பெயரிலேயே எனக்கு ஒரு மரியாதை இருக்கிறது.
அல் ஹம்து லில்லாஹ்.!

Friday, August 18, 2017

வளைகுடாவில் வாங்கிய காகிதத்தில்...

#தமிழ்முஸ்லிம்
உண்மையில் இது கவிதையல்ல நான் என் மகளுக்கு எழுதி அனுப்பிய முதல் கடிதம். ஒரு ரோஜா நிற காகிதத்தில் மை பேனாவால் எழுதி சவுதி அரேபியாவில்லிருந்து அனுப்பினேன். இப்போதும் வாசித்து நெகிழ்கிறேன். குடும்பத்தைப் பிரிந்து வாழ்வுதேடி பாலைவனம் வந்த ஒரு தந்தையின் வலிகளைப் படம்பிடித்துக் காட்டும் காட்சிப்பேழை இது. எங்கோ இருந்து கொண்டு தன் சுற்றங்களுக்காக உழைக்கும் முகம் தெரியாத பல அப்பாக்களுக்கும் சகோதரர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.
பனிரோஜா வம்சத்தின்
ஒற்றை இளவரசியைப் போல்
பிறந்த என் மகளே மகளே
நலமா நலமா
நீ
பிறந்த
பொற்பொழுதான
அப்பொழுதும்
நானுன் அருகிலில்லை

Thursday, August 17, 2017

வெள்ளிக் கிழமை-ஜூமுஆ சிறப்பு

அல்பாகவி.காம்

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை ஒரு புனித நாளாகும். அந்நாளில் தொழப்படும் கூட்டுத்தொழுகைக்கு பல்வேறு சிறப்புக்கள் உண்டு.
ஜும்மாத் தொழுகையும் ஐவேளைத் தொழுகையைப் போன்றே கட்டாயக் கடமையாகும். இது லுஹர் தொழுகைக்கு பதிலாக தொழப்படும் தொழுகையாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் 62:9)

எனது அனுபவங்கள் பலவற்றை மனம்திறந்து பகிர்ந்திருக்கிறேன்

எனது அனுபவங்கள் பலவற்றை மனம்திறந்து பகிர்ந்திருக்கிறேன் மற்றொரு அன்பர் அப்படி ஓர் கஷ்டத்தை அனுபவிக்ககூடாது என்கிற எண்ணம் மட்டுமே .
பணியில்லாமல் இருப்பது ஓர் கொடுமை வருமானம் ஓர் பக்கம் ஏச்சுக்கள் மறுபக்கம் எள்ளல்கள் இன்னொரு பக்கம். நான் வருமானம் இன்றி இருந்த நேரத்தில் ஓர் பால்ய நண்பர் கேட்டார் இன்னொரு வருடத்தில் உனக்கு வேலை கிடைக்குமா என்று.
வேதனையான நாட்கள் அவை அந்த சூழலை யாருக்கும் இறைவன் கொடுக்ககூடாது. தன்னம்பிக்கை மட்டுமே உங்களை கரைசேர்க்கும் எந்த சூழலிலும் அதனை இழந்துவிடாதீர்கள்.
இறைவன் அனைவரையும் நேரான பாதையில் செலுத்திட எனது பிரார்த்தனைகள்.

Tuesday, August 15, 2017

சுவிஸ்சர்லாந்தில் நடந்த ரெண்டு அதிசயம்...!!!

தகவல் Pattabi Raman
“நீங்க சும்மா இருந்தா போதும்,மாதம் 1,72,000 ரூபா உங்கள் வீடுதேடி வரும்” என்று ஒரு அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தா எப்படி இருக்கும்...
கேட்கவே சந்தோசமா இருக்குதுல...
அப்படி ஒரு அதிசய அறிவிப்பை “சுவிஸ்” அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னால் அறிவித்ததும் உலகமே ஆச்சரியத்தில் உறைந்தது.
1.ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் “அடிப்படை” ஊதியமாக 1,75000 ரூபாய் ( சுவிஸ் மதிப்பில் சுமார் 2500 Franc ) வழங்கப்படும்.
2.ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம்
“அடிப்படை” ஊதியமாக 45,000 ரூபாய்
( சுவிஸ் மதிப்பில் சுமார் 625 Franc ) வழங்கப்படும்.

இவர்கள் பிறந்த இந்த தேசத்தில் நானும் பிறந்திருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன்!

Samsul Hameed Saleem Mohamed

ஒருவர் இந்த தேசத்தின் தந்தை ஆனால் அணிந்திருப்பது அரையளவு ஆடை! கோலம் கண்டால் ஒரு சாதாரண ஃபக்கீரின் நிலை!
இன்னொருவர் எல்லைக்கே காந்தி அவரின் ஆடையும் சாதாரணத்திலும் மிக சாதாரணமானதாக! வசீகரம் இல்லாமல்!
பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர்ந்த ஆடையை தன் பெயர் பொறித்து வெளிநாட்டில் தயாரிக்கச் சொல்லி அதை உடுத்தி படோடோப டாம்பீகம் காட்டிய தேசபக்தன் எங்கே...!
இந்த நாட்டின் #தந்தை என்றும் #எல்லை என்றும் பெயரெடுத்த இவர்கள் எங்கே...!

முயற்சியை தொடருங்கள் நிச்சயம் நிறைவேறும்.

2 வருடங்களுக்கு முன்னெடுத்த முயற்சி முடிவு செய்திடும் தருணத்தில் நழுவியது . சென்ற வாரம் அன்பர் அழைத்தார் புள்ளியை சமர்ப்பியுங்கள் உங்களுக்குத்தான் மாற்றம் இல்லை என்றார் . சமர்ப்பித்தோம் பழம் நழுவி பாலில் விழுந்தது.
நடுவில் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சென்று ஓர் வாழ்த்தினை சொல்லியே சென்றேன்.
முயற்சியை தொடருங்கள் நிச்சயம் நிறைவேறும்.
------------------------------
வாழ்வின் இருகோடுகளை இணைத்திடவே ஒவ்வொரு நாளும் போராட்டங்கள், கோடுகள் சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கலாம். அதனை குறைத்திடவோ நிறைத்திடவோ இருக்கும் மனம் இருந்தால் போதுமானது அனைத்தும் வசப்படும்.
-----------------------------------------

Sunday, August 13, 2017

கடின உழைப்பால் உயர்ந்த இவரைபற்றி சில நிமிடங்கள் உங்களுடன்

Mohamed Gaffoor
அஸ்ஸலாமு அலைக்கும்...
படத்தில் நீங்கள் காண்பது
என் உடன்பிறவாதம்பி
மீரான் பாபு ஹீசைன் Meeran Babu Hussain
கடின உழைப்பால் உயர்ந்த இவரைபற்றி
சில நிமிடங்கள் உங்களுடன்...

தனிமை...சிலருக்கு வெறுமை...

தனிமை...சிலருக்கு வெறுமை...
வேறு சிலருக்கோ சிந்தனை குகை...
அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!. ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’ அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சிறகுகள்

கவிதை - சிறகுகள்
திருச்சி முஹம்மது காசிம்

கஷ்டத்தில் சிக்கியவுடன்
சருகாகி விட்டோம்
என்று எண்ணி விடாதே !
பறவைகள்
ஒடிந்த சிறகை வைத்து தான்
பறக்க முயற்சிக்கிறது !

பல இடங்களில் முட்டி மோதியும்
வாய்ப்புகள் கிடைக்கவில்லையே
என்று மனம் ஒடிந்து விடாதே !
காற்றில் பறக்கும் சிறகுகள்
ஒரிடத்தில் நிலையாக நிற்ப்பதற்க்கே
அலை மோதுகின்றது !

Saturday, August 12, 2017

அப்படி என்னதான் இல்லை கவிதையில்?

தும்பி துரத்தும் சிறுவயதை
திரும்பிப் பார்ப்பது கவிதையடா
வம்பு வளர்த்த வாலிபத்தை
வரைந்து காட்டலும் கவிதையடா
தெம்பு உணர்த்தும் நட்புகளை
தேவதை ஊட்டிய காதலினை
நம்பிக் கேட்போம் கவிதையிலே

நல்ல கொளுவ மீனும் கெளங்கும் நெத்திலியும்!

Noor Mohamed 
நெத்திலியும் கெளங்கும்!

______________________________
முகநூலில் முழுகி முத்தெடுத்துக் கொண்டிருந்தேன்.status போட்டு ரெண்டு நாளாகிவிட்டது.எதைப் போடலாமென்று மனதுக்குள் யோசனை வேறு.
வீட்டுக்காரி அருகில் வந்து நின்றாள்.
இந்த விலாயிலெ அப்டி என்னத்தயதான் செய்வீங்க.
நடைல நல்ல மீனே வருதில்ல.ஒரே நாற மீனு.
கொஞ்சம் மீங்கடக்குப் போய் நல்லமீனா வாங்கீட்டு வரப்புடாதா.ஃபோண தூக்கி ஒதுக்கி வச்சீட்டு பொய்ட்டு வாங்களேன் .
சரி,வாங்கீட்டு வாறேன் என்றபடி கிளம்பினேன்.
status க்கு மேட்டர் தந்ததுக்கு
மனசுக்குள் அவளுக்கு நன்றி.
ரோட்டுக்கு வந்தபோது அலி பைக்கில் வந்து கொண்டிருந்தான்.
ஏ,அலி எங்கெ?
மீங்கடைக்கு .
நானும் வாறேன்.
பின்னால் ஏறி அமர்நதேன்.
மலக்கறி கடைகளைத் தாண்டி மீன் ஏரியாவில் நுழைந்தேன்.(மீங்கடைக்கு வந்து ரொம்பநாள் ஆகிவிட்டது).
ஓய் மோலாளி ஒருபாடு நாளாச்சே கண்டு.நல்ல நெத்திலியும் கரமடிச் சாளையும் இரிக்கி வாங்கீட்டு போவும்.
மீன்காரி குரல் எழுப்பினாள்.
இப்பதாம்புள்ளே வாறேன்.ஒண்ணு சுத்திபாத்துட்டு வாறேன்.
போய் பாரும்.எங்கபோனாலும் கடைசீல இங்கதான் வருவீரு.வேற உமக்கு புடிச்ச மீனொண்ணும் இண்ணக்கி இல்ல.
சரிவுள்ளேய் எதுக்கும் ஒரு ரவுண்டு பாத்துட்டு வரேன் என்றபடி நகர்ந்தேன்.
அந்தப்பக்கம் சூரை அறுத்து வைத்திருந்தான்.ரெண்டு நாளா சூரதான்.வேற பாக்கணும்.
இன்னொருவன் கணவாவுடன் இருந்தான்.நமக்கு அது கண்டாலே ஆகாது.
ஒருகுரல் கேட்டது.
காக்கா வாருங்கொ.நல்ல கொளுவ.உயிருள்ள புதிய கொளுவ.பாதி வெட்டட்டா?
அவனருகில் போனேன்.
அவ்வளவு வேண்டாம்.கொஞ்சம் போரும்.
நூறு ரூபாக்கு வெட்டட்டா.
சரி
கத்தியை மீன்மீது வைத்தான்.
அப்பா கொஞ்சம் நீக்கிதான் வெட்டேன் ரொம்ப கொறவா இருக்கு.
நீக்கினா என் வெரலு போச்சு என்று சிரித்தபடியே ஒரு மிலிமீட்டற் அதிகமாக வெட்டித் தந்தான்.
வாங்கிவிட்டு திரிம்பும்போது மீண்டும் அவளது குரல்
ஓய் மோலாளி கொஞ்சம் நெத்திலி கொண்டு போவும்!
சரி,ஒரு 20ரூபாக்குபோடு.
வாங்கி வளியே வந்தால்
அத்துலு கெளங்கு விற்றுக் கொண்டிருந்தான்.
மாமா ஒருகிலோ கெளங்கு கொண்டு போங்கோ.நெத்திலி கூட மயக்குக்கு .
நெத்தலிபோட்டு மயக்கின கெளங்கு!நாவில் எச்சில் ஊறியது.
ஒரு கிலோ 20/ரூபாக்கு வாங்கியபடி வீடுவந்து சேர்ந்தேன்.
அவளுக்கு மிகவும் சந்தோஷம்.நல்ல கொளுவ மீனும் கெளங்கும் நெத்திலியும்!

Noor Mohamed 

தேடல்கள் ....!

ஞானத்தின் தேடலில்
இயற்கையில் ஒன்றினேன்
இருப்பதும் இல்லாததும்
ஒன்றென கண்டேன்.

பொருளின் தேடலில்
உலகில் உழன்றேன்
உயர்வும் தாழ்வும்
உண்டென கண்டேன்.

Friday, August 11, 2017

கனமான கோணிப்பைகள்


“எதிர்கால இந்தியாவே
ஏங்கிநிற்கும் மானுடமே
என்ன வேண்டும் உனக்கு
சொல்ல வேண்டும் எனக்கு”
சொல்றேனுங்கய்யா:

பள்ளிக்கூடச் சீருடையும்
பை நிறையப் புத்தகங்களுமாய்
கண்டு வரும் கனவொன்று
எங்களைக்
கடந்து போகுதய்யா

வெள்ளி

வெள்ளி

மரபான நாளென்பர் மண்ணில்   எவர்க்கும்
வரமாக வந்திருக்கும் வாய்ப்பு - சிறப்பின்
அடிப்படையில் இந்நாளே பொன்னாளாம் நல்ல
விடிவெள்ளி பூத்திடும் வான்.


இப்னு ஹம்துன்

Thursday, August 10, 2017

தலைவரிடம் இருக்க கூடாத மிக முக்கிய தீய பண்புகள் !


தலைவரிடம் இருக்க கூடாத மிக முக்கிய தீய பண்புகள் !

1. பதவிக்கு ஆசைப்படுதல் ,
2. பதவியை குடும்ப சொத்தாக கருதுதல் ,
3. தன்னை முன்னிலைப்படுத்துதல், புகழாசை
4. பலவீனராக இருத்தல்
5. சொல் வேறு செயல் வேறாக செயல்படுதல்
1. பதவிக்கு ஆசைப்படல்
“பதவிக்காக ஆசைப்படாதீர்கள் நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.” (புகாரி) என்ற நபி மொழிப்படி பதவிக்கு ஆசைப்படுபவரை தலைவராக்க மாட்டோம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியது போன்று அலைபவராக தலைமை இருக்கக் கூடாது.
2. குடும்ப சொத்தாக கருதுதல்
ரசூல் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவியை ஒரு அமானிதமாக கருதி பொறுப்புடன் தன் கீழுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டுமே தவிர குடும்ப சொத்தாக பொறுப்பை கருதக் கூடாது.

எனது தாய் மாமா எஸ் என் ஏ அஜீஸ் / Gajini Ayub

எஸ்.என்.ஏ.அஜீஸ் பி.ஏ.பி.எல்
எனது தாய் மாமா எஸ் என் ஏ அஜீஸ் ,தமிழ் நாடு காங்கிரஸில் முதலமைச்சர் காமராஜ் கட்சியின் தலைவராக இருந்தபோது அவருக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் பொதுச் செயலாளராகவும் , காங்கிரஸ் கட்சியின் நாளிதழான தேச பக்தன் பத்திரிக்கையின் ஆசிரியராக பணியில் இருந்தார். புதுவை மாநிலத்தின் சட்ட மன்ற தேர்தல் முழு தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்து பெறும் வெற்றியை பெற்று கொடுத்தவர். அப்போதுதான் பரூக் மரைக்காயர் முதல்வரானார் புதுவையில் !.அமைச்சர் பதவி என்பது ஒரு வட்டத்துக்குள் என்னை கட்டிப்போடும் கட்சியின் உயர் மட்ட பதவிகளே போதும் என்று கட்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்.

நான் பெற்ற முதல் குழந்தை


நான் பெற்ற முதல் குழந்தை

தவழ்ந்தாடும் - தத்தி நடக்கும் - தணலை மிதிக்கும் - விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை முன்வைத்த காலைப் பின் வைக்க நினைத்ததுமில்லை! முரசொலி நான் பெற்ற முதல் குழந்தை! ஆம் அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க சென்று வா மகனே! செருமுனை நோக்கி! என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை!
           - கலைஞர் மு. கருணாநிதி
மேலும்

விளக்கை ஏற்று

உள்ளே நுழைந்து விடுகிறது
உனது அன்பின் ஒளி.
கொட்டும் குளவியாய்
கண்ணாடி ஜன்னலில்
முட்டித் தவிப்பதெல்லாம்
அந்த வெறுப்பு தான்.

கொடிக்கால் ஷேக் அப்துல்லா

கொடிக்கால் செல்லப்பாவாக அறிமுகமாகி அப்துல்லாவாக வாழும் என் பாசத்திற்குரிய அருமை அண்ணன்.
40 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பின் அவரை இரு நாட்கள் முன்பு எனது வீட்டில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தேன்.80 ஆண்டுகால சமூக அரசியல் சித்தாக்கங்களை சற்றும் பிசகாமல் தொகுத்து வழங்கும் அறிவியல் கருவூலமாக அவர் திகழ்கிறார்.
காம்ரேடாக, கலைஞனாக, கவிஞராக அரசியல்வாதியாக, மத நல்லிணக்க தூதராக எழுத்தாளராக, சிறுபான்மை மக்களின் ஆளு மையாக அவரது பல்திறன் வெளிப்பாடுகள் பற்றிய செயல்பாடுகள் என்னை மிகவும் வியக்க வைத்தது என்றால் அது மிகையல்ல.

Wednesday, August 9, 2017

இரவல் தந்தவன் கேட்கின்றான் -

இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?//
கவியரசர் கண்ணதாசன் எழுப்பிய வினாவுக்கு விளக்கம் கேட்டிருந்தார் என் அன்பு இளவல் Gopala Krishnan..
அவர் குறிப்பிட்ட அந்த பாடல் வரிகள் எனக்கு பலதரப்பட்ட சிந்தனையை தூண்டி விட்டது.
இஸ்லாமியர்களாகிய நாங்கள் யாரேனும் இறந்ததைக் கேள்வியுற்றால் "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்" என்று மொழிகிறோம்.
இதன் உட்பொருள் எங்கிருந்து வந்ததோ அங்கேயே அது மீண்டு விட்டது என்பதாகும் .

Tuesday, August 8, 2017

ஏங்குகிறான் மனிதன் ....

நிம்மதிக்கு ஏங்குகிறான் 
ஈன்றெடுத்த தாயின் 
அழகிய மடிதனில் 
சாய்ந்திட மறுத்தவனாய் ....
அறிவுரைக்கு ஏங்குகிறான் 
வளர்த்த தந்தையின் 
அறிவார்ந்த அனுபவங்களை 
அறிந்திட மறுத்தவனாய் ....
மகிழ்ச்சிக்கு ஏங்குகிறான் 
வாக்கப்பட்ட மனைவியின் 
ஆழமான அன்புதனை 
உணர்ந்திட மறுத்தவனாய் ....
பாசத்திற்கு ஏங்குகிறான் 

Monday, August 7, 2017

எவ்விதத்திலும் இல்லாள் இந்த இல் ஆள் எனும் நல்லாள்..!

திருமணம் எனும் உறவின் மூலம் பெண்ணுக்கு #இல்லாள் எனும் பெரும் பெயர் கிடைக்கிறது. அப்படி கிடைத்த அந்த பெயர் அப்பெண்ணுக்கு எப்படியெல்லாம் பொருந்துகிறது என்பது பற்றி ஒரு சுருக்கமான பார்வை.
👧 கணவன் என்கிற புது உறவைப்பெற்று அதன் முன்பிருந்த துணை இல்லாள் எனும் நிலை நீங்க அவள் இல்லாள் ஆகிறாள்.
👧 கணவனின் இல்லம் புக அவன் வீட்டின் இல்லாள் ஆகவும்; அதோடு அவ்வீட்டின் ஒரு அங்கமாய் அந்த இல்லத்தின் ஆட்களில் ஒருவர் எனும் வகையிலும் அவள் இல்லாள் ஆகிறாள்.
👧 கணவனின் நீங்கா அன்பைப் பெற்று அவன் உள்ளம் எனும் இல்லத்தில் குடியேறி அந்த இதய இல்லத்தை ஆளும் தகை கொண்டு வகை வென்று இல்லாள் ஆகிறாள்.

"மருத்துவ முத்தம்"

Rafeeq Sulaiman
"மருத்துவ முத்தம்"
2011இல் என்று நினைவு.
ஒரு தாய் தான் பாலூட்டும் குழந்தையினை முத்தமிடும் வேளையில் குழந்தையின் முகத்திலோ அல்லது உடலிலோ எங்கேனும் நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் இருந்துவிட்டால், அது தாயின், 'டான்ஸில்' போன்ற துணைநிலை நிணநீர் சுரப்பிகள் மூலம் உணரப்பட்டு 'பி -டைப்' நினைவக செல்கள் மூலம் குறிப்பெடுத்துக்கொள்கிறது. பிறகு அந்த நோயினை எதிர்க்கும் சக்தியினைத் தயாரிக்கும் தாயின் உடல் தாய்ப்பால் வழியே குழந்தைக்குச் சேர்க்கிறது. நோயிலிருந்து காக்கிறது.

Sunday, August 6, 2017

யாருக்கு யார்மேல் பயம் ?

ஒரே குழுவாக செயல்பட்டு ஒன்றுக்குள் ஒன்றாக இருந்துகொண்டு அராஜகங்கள் அநியாயங்கள் அனைத்திலும் பங்குபெற்றுவிட்டு பலனையும் பெற்று அனுபவித்து ருசிகண்ட பூனையாய் அத்தனையும் தனக்கேவேண்டுமென எழும் பேராசையால் வரும் பிரிவுகள் காலம் காலமாக மனிதர்களிடையே அழிவுகளை ஏற்படுத்தியிருப்பது சரித்திரங்கள் சொல்லும் உண்மை. அதை நாம் வாழும் காலத்தில் பன்னாட்டு அரசியலில் பார்வையாளனாக பார்த்ததுபோல் இப்போது அதே அரசியலில் பாதிக்கப்பட்டவனாக தமிழன் இன்று இருக்கிறான்.

Saturday, August 5, 2017

மனிதர்கள் எல்லோரும் இப்படி இருந்துவிட்டால்..................

ரஹீம் கஸாலி

ஒரு கடையில் நின்று கொண்டிருந்தேன். ஒருவர் ரீசார்ஜ் செய்ய வந்திருந்தார். அவர் நின்ற இடத்தின் நேர்கீழே ஒரு பத்து ரூபாய் தாள் கிடந்தது. நான் அதை எடுத்து அவரிடம் நீட்டியபடி
"இந்த பணம் உங்களுதா?... கீழே கிடந்தது" என்றேன்.
அதற்கு அவர் பாக்கெட்டில் இருந்ததை சரி பார்த்துவிட்டு "என் பணமில்லை" என்றார்.
கடைக்காரரிடம் "அப்படின்னா இது உங்க பணமா இருக்கும். கல்லாவில் போடுங்க" என்று சொன்னேன்.
கடைக்காரரோ "எங்கள் பணமில்லை. யாரோ தவற விட்டிருக்கணும். நீங்கதானே பார்த்து எடுத்தீங்க. நீங்களே வச்சுக்கங்க" என்றார்.

Makkah Live HD - قناة القران الكريم

Thursday, August 3, 2017

மொழிமின் (அத்தியாயம் – 5)

பெரிய அரங்கு. அதில் பிரம்மாண்ட மேடை. பெருந்திரளாய் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முக்கியஸ்தர்கள் உரையாற்றும் அம்மேடையில் மக்களுள் சிலரும் ஏறி உரையாற்றலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் மானாவாரியாய் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க முடியாதில்லையா? எனவே, உரையாற்ற விரும்புபவர் தமது கருத்தையும் வாக்கியங்களையும் எழுதித் தெரிவிக்க வேண்டும். குழுவொன்று அதைப் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு அனுமதி வழங்கும் என்பது ஏற்பாடு.
பெரும்புள்ளிகளும் சிந்தனையாளர்களும் அறிவில் மூத்தவர்களும் வீற்றிருக்கும் மேடை என்பதால், சீரிய கருத்தும் செம்மையான மொழியும் கொண்டவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. ஓரிரு நிமிடம் பேசினாலே போதும், கிடைத்தற்கரிய வாய்ப்பு அது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்ததால், விஷயமுள்ளவர்கள் பெருமுயற்சி எடுத்து மெனக்கெட்டார்கள். மற்றவர்கள் கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இயல்பிலேயே சுயமரியாதை ஊறிப் போன அவரது இரத்தத்தில் பிறந்த அவரது மகன்

ஆயிரத்தி தொளாயிரத்தி ஐம்பதுகளின் இறுதிக் காலம் அது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர்.. தான் துவங்கி இருந்த எலக்ட்ரிக் கடையில் தனது கல்லாவின் இருக்கையில் அமர்ந்து இருக்கிறான் இருபது வயதுகளின் மத்தியில் இருக்கக்கூடிய அந்த இளைஞன்.
அப்போது கடைக்கு வருகிறார் விற்பனை வரித் துறை அதிகாரி. வந்தவர் கல்லாவில் அமர்ந்து இருக்கும் அந்த இளைஞனை எழச் சொல்கிறார் . காரணம்..அப்போதெல்லாம் தமிழகமெங்கும் சேல்ஸ் டேக்ஸ் ஆஃபீசர் ஆய்வுக்கு வந்தால் நேராகச் சென்று முதலாளியின் இருக்கையில் அமர்ந்துதான் கணக்கு வழக்குகளைப் பார்ப்பார். அவர் பார்த்து முடிக்கும் வரை முதலாளி அவர் அருகில் நின்று கொண்டு இருக்க வேண்டும். இதுதான் வழக்கம். இது அந்த இளம் முதலாளியும் அறியாதது அல்ல.

Wednesday, August 2, 2017

யூ டியூபில் இன்றொரு மெல்லிசைக் குரலொன்று புதிதாய்கேட்டேன் !

Gajini Ayub

யூ டியூபில் இன்றொரு மெல்லிசைக் குரலொன்று புதிதாய்கேட்டேன் ! குரலுக்கு சொந்தக்காரர் நம்மின் முக நூல் சகோ நீடூர் Kiyasudeen Sahabudeen !!
அவர் பாடியிருப்பது மறைந்த மாணிக்க மனிதர் நீடூர் அய்யூப் அண்ணன் அவர்கள் பற்றி !
நிகழ்காலத்தில் நேரில் கண்ட நேசக் குழந்தை குணம் படைத்த அய்யூப் அண்ணன்தம் சொந்த மண்சார்ந்த செய்திகளை முக நூலுக்கு முன் காலத்தே நம்ம ஊரு செய்தி என்று அச்சிலிட்டு பெருமை சேர்த்தவர்

அம்மா நீ அற்புதம்!

*✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*
*✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்*.
*✏ தன் 'அம்மா' தனக்கு* *என்னவெல்லாம்*
*செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.*
*அவன் அதை உணரும்போது*, *அவள் உயிரோடு இருப்பதில்லை.*
*✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.*
*

நீட்டாக ஒரு உரையாடல்

நீட்டாக ஒரு உரையாடல்
நேற்று வீட்டுக்கு இருவர் வந்திருந்தனர். அவர்களோடு உரையாடுகையில், மூன்றாவதாக ஒரு தோழியின் மகள் குறித்துப் பேச்சு வந்தது. அவள் கடந்த ஆண்டே தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள். எட்டு லட்சம் நன்கொடை கொடுத்து தனியார் கல்லூரியில் சேர்ந்தாள் என்றார்கள். எட்டு லட்சம் மிகவும் குறைவுதான்.
இப்போது வந்திருந்த ஒருவரின் மகள் நீட் தேர்வு எழுதியிருக்கிறாள். ஸ்கூல் டாப்பர், இடம் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாமல் நிச்சயமற்ற நிலை இருப்பதால் அவர் சற்றே ஆத்திரத்துடன் பேசினார். அவருடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், அவர் பேசிய கருத்துகள் பொதுவாக மேல்தட்டு மக்களின் மனநிலையை மட்டுமே பிரதிபலித்தன. என்னால் இயன்ற வரையில் அவருக்கு சில விஷயங்களைத் தெளிவுபடுத்தினேன். தெளிவு பெற்றாரா தெரியாது.

Tuesday, August 1, 2017

ஒவ்வொரு விஷயமாக பார்ப்போம்..

இந்த முகநூல் வழியாக பல விஷயங்களை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்..
ஒவ்வொரு விஷயமாக பார்ப்போம்..
இந்த முகநூல் நமக்கு நல்ல
ஒரு தன்னம்பிக்கையை தரும் ஊக்க மருந்து என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்..
அது எப்படி என்பது இதைபடித்து முடிக்கும் போது உங்களுக்கு புரியும்..
முதலில் ஒரு பதிவு போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்..
அந்த பதிவிற்கு வரும் விருப்பங்கள்,பின்னோட்டங்களை வைத்து பிறரின் மனவோட்டங்களை தெரிந்துக் கொள்ளலாம்..
சிலர் சொல்லப்படும் கருத்துக்கள் பிடித்ததாக இருந்தால்,நல்லவையாக இருந்தால் அன்பாய் வாழ்த்தைச் சொல்வார்கள்..
இவர்கள் பலருடைய வாழ்க்கையில் உற்சாகமூட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.இது போன்றவர்களை வாழ்க்கையிலும் நாம் சந்தித்திருக்கலாம்..
அடுத்து, நல்ல விஷயத்தை நாம் பல நாட்களாக யோசித்து நல்ல முறையில் எழுதியிருப்போம்..
ஆனால் அதற்கு எதிர்மறையாக ஒரு கருத்தை வந்து சொல்வார்கள்..கருத்துச் சொல்வதில் எந்த தப்பும் கிடையாது..
ஆனால் சில நேரங்களில் அவர்கள் யாரென்றே நமக்கு தெரியாது..நமது ஒரு பதிவுக்கு கூட லைக் போட்டிருக்க மாட்டார்கள்..ஆனால் பிரச்சினை செய்வதற்கு உடனே புறப்பட்டு வந்து விடுவார்கள்..
இப்படி பட்டவர்களை நாம் வாழ்க்கையிலும் பார்த்திருக்கலாம்..இவர்கள் தன்னை எப்போதும் தனியாக அடையாளப் படுத்திக் கொள்ள விரும்புபவர்கள்..
அடுத்ததாக பதிவில் சொல்லவந்த விஷயத்தை திசை திருப்பி விடுவது..
நாம் சொன்ன கருத்தை விட்டு பதிவு வேறு திசையில் திரும்பி பயணித்துக் கொண்டிருக்கும்..

திரு.அப்துல்கலாமின் நினைவிடம்

அஸ்ஸலாமு அலைக்கும், திரு.அப்துல்கலாமின் நினைவிடம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டதும் அதில் அவருக்கு சிலை வடிக்கப்பட்டும் அதனருகே பகவத்கீதை வைக்கப்பட்டதும் திட்டமிட்ட ஆதாயமிக்க அரசியல். அந்த அரசியலுக்கு இந்தியாவில் வாழக்கூடிய எந்த முஸ்லீமும் பலியாகிவிடக்கூடாது. எனவே அது குறித்து நாம் அதிகம் விவாதிக்க வேண்டிய தேவை இல்லை.
தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு மட்டுமல்ல ஒட்டு மொத்த இஸ்லாத்தின் நிலைப்பாடே சிலை வடிப்பதை ஒழிப்பதும் மறுப்பதும் தான். அதுபோலவே இறந்தவரை பற்றி விமர்சனம் செய்வதும் இஸ்லாத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

தமிழின் தாயகம்

Vavar F Habibullah
தமிழின் தாயகம்

கவிமணி... 'செந்தமிழ்ச் செல்வன்' என்று இவருக்கு பட்டம் அளித்து கவுரவித்தார் என்றால், பாண்டித்துரைத் தேவர் ஒருபடி மேலே போய் 'தமிழின் தாயகம்' என்று இவரை போற்றி வாழ்த்தினார்.இப்படி தமிழ் அறிஞர் களால் போற்றி வணங்கப்பட்ட பெருமகன் தான் செய்கு தம்பி பாவலர் அவர்கள்.
கோட்டாறு ஊரைச் சார்ந்த இந்த தமிழ் அறிஞர் சதாவதானக் கலையில் வித்தகர்.
சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலை யில் ஒரே நேரத்தில் நூறு விசயங்களில் தன் கவனத்தை செலுத்தி தன் நுண்ணறிவால் மக்களை ஈர்த்த இவர் திறன் கண்டு தமிழ் மன்றம் இவருக்கு மகாமதி சதாவதானி என்ற சிறப்பு பட்டத்தை சூட்டி கவுரவித்தது.