Thursday, August 10, 2017

கொடிக்கால் ஷேக் அப்துல்லா

கொடிக்கால் செல்லப்பாவாக அறிமுகமாகி அப்துல்லாவாக வாழும் என் பாசத்திற்குரிய அருமை அண்ணன்.
40 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பின் அவரை இரு நாட்கள் முன்பு எனது வீட்டில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தேன்.80 ஆண்டுகால சமூக அரசியல் சித்தாக்கங்களை சற்றும் பிசகாமல் தொகுத்து வழங்கும் அறிவியல் கருவூலமாக அவர் திகழ்கிறார்.
காம்ரேடாக, கலைஞனாக, கவிஞராக அரசியல்வாதியாக, மத நல்லிணக்க தூதராக எழுத்தாளராக, சிறுபான்மை மக்களின் ஆளு மையாக அவரது பல்திறன் வெளிப்பாடுகள் பற்றிய செயல்பாடுகள் என்னை மிகவும் வியக்க வைத்தது என்றால் அது மிகையல்ல.

யூனிவர்சல் என்ஜினியரிங் கல்லூரியின் இயக்குனராக திகழும் இவர் குமரியில் பெட் மற்றும் மெட் என்ஜினியரிங் கல்லூரிகள் தோன்ற காரணமாக அமைந்தவர்.கலைஞரு டனும் எம்ஜிஆருடனும் மிக நெருக்கமான உறவை கொண்டவர்.சுதந்திர இந்தியாவில் இவர் அறியாத - நட்பு பாராட்டாத அரசியல் தலைவர்களே இல்லை.பழைய வரலாறுகளின் முழு பெட்டகமாக இவர் திகழ்கிறார்.
பண்பட்ட மூத்த அரசியல் தலைவருக்கான தகுதிகள் அனைத்தும் இருந்தும் குமரி மண்ணின் செல்வன் என்பதாலோ என்னவோ தமிழகம் இவரது திறனை சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை.வரும் ஆகஸ்ட் 15 அன்று சென்னையில் இவருக்கான பாராட்டு விழா ஒன்றினை ஹிந்து பத்திரிகை குழுமம் ஏற்பாடு செய்திருப்பது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி.
நல்லதொரு இளம் காலைப் பொழுதை எனது நீண்டநாள் நண்பருடன் நீண்டநாள் இடைவெ ளிக்குப்பின் நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தது மனதை வருடிக் கொடுக்கும் நிகழ்வு தான்.
அவரை பற்றிய வரலாறு ஆவண விடியோ ஒன்றையும் அவரை பற்றிய முழுமையான வரலாறு புத்தகம் ஒன்றையும் எனக்கு தந்து எனது கருத்தை அறிய ஆவல் கொண்டிருப்பதாக கூறியது...
ஒரு ஆசான் மாணவனை சோதிக்கும் நிகழ்வாகவே நான் கருதுகிறேன்.
Vavar F Habibullah



No comments: