Thursday, August 17, 2017

எனது அனுபவங்கள் பலவற்றை மனம்திறந்து பகிர்ந்திருக்கிறேன்

எனது அனுபவங்கள் பலவற்றை மனம்திறந்து பகிர்ந்திருக்கிறேன் மற்றொரு அன்பர் அப்படி ஓர் கஷ்டத்தை அனுபவிக்ககூடாது என்கிற எண்ணம் மட்டுமே .
பணியில்லாமல் இருப்பது ஓர் கொடுமை வருமானம் ஓர் பக்கம் ஏச்சுக்கள் மறுபக்கம் எள்ளல்கள் இன்னொரு பக்கம். நான் வருமானம் இன்றி இருந்த நேரத்தில் ஓர் பால்ய நண்பர் கேட்டார் இன்னொரு வருடத்தில் உனக்கு வேலை கிடைக்குமா என்று.
வேதனையான நாட்கள் அவை அந்த சூழலை யாருக்கும் இறைவன் கொடுக்ககூடாது. தன்னம்பிக்கை மட்டுமே உங்களை கரைசேர்க்கும் எந்த சூழலிலும் அதனை இழந்துவிடாதீர்கள்.
இறைவன் அனைவரையும் நேரான பாதையில் செலுத்திட எனது பிரார்த்தனைகள்.



--------------------
டென்ஷன் , ஸ்ட்ரெஸ் இன்று பலர் சாதாரணமாக உபயோகிக்கும் ஓர் சொல்லாக உருவெடுத்துவிட்டது . வேலையில் இருப்பவரும் வேலையில் இல்லாதவரும் இதையே சொல்கின்றனர்.
நிறுவனங்கள் பல வேலைகளுக்கு அமர்த்துவதற்கு முன்பே இதைப்பற்றியும் விசாரிக்கின்றனர் அழுத்தங்கள் வேலைகளில் இருக்கும் அதனை கட்டுக்குள் வைத்துகொள்ள நம்மை தயார்படுத்தணும். இதனை செய்திட தவறினால் பல வேலைகள் நடப்பது சிரமம்.

--------------------
சகோதரர்கள் சிலர் உணர்ச்சிக்கு கட்டுப்பட்டு வேலை விசயத்தில் முடிவெடுக்கின்றனர் . நல்ல வேலையை வேறு எற்பாடில்லாமல் ராஜினாமா செய்தோரும் உண்டு . இன்றைய காலகட்டம் மிகவும் போட்டி நிறைந்தது நல்ல சம்பளங்கள் கிடைத்தால் சந்தோசம் ஆனால் கிடைப்பது குதிரைகொம்பாகவே இருக்கிறது .
சம்பள விசயத்தில் ஒவ்வொரு நிறுவனமும் கொண்டிருக்கும் கொள்கைகள் வெவ்வேறு. என்றும் முடிவெடுக்கும் முன் மொத்த சம்பளத்திற்கும் (Gross Salary) நிகர சம்பளத்திற்கும் (Net Salary) வித்தியாசத்தை உணருங்கள் . சலுகைகளை கணக்கெடுக்காமல் முடிவெடுத்தால் பின்னர் வருத்தபடுவீர்கள்.

Sheik Mohamed Sulaiman

No comments: