Sunday, August 27, 2017

நீட் தேர்வும் பிளாஸ்டிக் சர்ஜனும்


நாகர்கோவில் நகரை சார்ந்த தொழில் நகரம் கோட்டாறு.கோட்டாறை சார்ந்த மாணவர்கள் படிப்பு தேவையை நிவர்த்தி செய்த பள்ளிக்கூ டங்களில் ஒன்று தான் இடலாக்குடி அரசு பள்ளி.சாதாரண பள்ளிக்கூடம் தான் அது.
ஆங்கில அறிவு மாணவர்களுக்கும் கிடையாது, ஆசிரியர்களுக்கும் அறவே கிடையாது.
சாதாரண நாட்டுத் தமிழில் தான் பாடம் நடக்கும்.
இத்தகைய சூழலில் வளர்ந்த ஒரு தமிழ் மாணவன் தமிழ் பள்ளியில் படித்து MBBS பட்டம் பெற்று பின்னர் FRCS பட்டம் பெற்று அமெரிக்காவில் லோஸ் ஏன்ஜலெஸ் நகரில் குடியேறி அமெரிக்கன் போர்டு பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் ENT துறையில் பட்டம் வென்று பிரபல மருத்துவராக தொழில் புரிவது என்பது சாதாரண விசயமல்ல.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் ஒப்பெற்ற லாஸ் ஏன்ஜல்ஸ் பேஷன் நகரில் வசிக்கும் டாக்டர் ஜெய்னுதீன் ஒரு அமெரிக்கர்.அமெரிக்க பெண்மணியை திருமணம் செய்து குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் ஜெய்னுதீன் எனது பால்ய கால நண்பர்.
மைக்கேல் ஜாக்சன் வீடு அருகில் தான் இவரது வீடும் உள்ளது.
கோட்டாறு ஊரில் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பள்ளிக்கூடத்தில் படித்து எம்பிபிஎஸ் டாக்டர் ஆன முதல் ஆள் இவர் தான்.என் போன்றோர் டாக்டர் ஆக முடியும் என்ற நம் பிக்கையை என் மனதில் விதைத்தவரும் இவர் தான்.நீட் தேர்வு எழுதாமலே உலக அரங்கில் உயர்ந்த டாக்டராக பிரகாசிக்க முடியும் என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்தியம்பும் ஒரு நட்சத்திரமாக இவர் திகழ்கிறார்.அமெரிக்கா செல்லும்போதெல் லாம் இவரை சந்திக்க நான் விரும்பியும் அது சில காரணங்களால் தடைபெற்றது.
இன்று ஒரு நிகழ்ச்சியில்...
ஹபீப் என்னை தெரிகிறதா! என்று சுந்தர தமிழில் ஒருவர் வினவிய போது நான் சற்று தடுமாறினேன்... காரணம் அவரது தோற்றம்!
எளிமை!!
கோட்டார் மக்களுக்கே உரித்தான ஒரு வெள்ளை துண்டு.. அது தலையை சுற்றி சற்று தோளையும் தளுவி இருந்தது.சிறிய தாடியுடன் கூடிய இயற்கை முகம், அதில் மாறா மெல்லிய புன்னகை.ஒரு சாதாரண தமிழ் முஸ்லிமின் எளிமை மிகு தோற்றம்.
இங்க்லீஸ் கலவாத அழகிய தமிழ் உரையா டல்.என்னை சுற்றி அமர்ந்திருந்த நண்பர்கள் வியப்பு கண்களால் அவரை உற்று நோக்க அமெரிக்காவின் ஒரு பிரபல அறுவை சிகிச் சை நிபுணர் இவ்வளவு எளிமையாகவா இருப்பார்.... வியப்பை அவர்களால் அடக்க இயலவில்லை! எனக்கும் கூடத்தான்.
நவ நாகரீமாக உடை அணிந்த ஒரு இளை ஞரை அந்த நேரம் ஒருவர் அழைத்து வந்து எனக்கு அறிமுகம் செய்தார்.அவர் லண்டனில் ஒரு கன்சலடண்ட் டாக்டர் என்று எனக்கு அறிமுகம் செய்தார்.சாதாரண தோற்றத்தில் நின்ற என் நண்பரை நான் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
Meet my friend Dr. Zainudeen the famous plastic surgeon of Lose Angeles
நாகரீரகத்தின் தொட்டிலில் ஆடி களைத்த பின் வருவதே எளிமையும் ஞானமும் ஆகும்
என் நண்பன் டாக்டர் ஜெய்னுதின் ஒரு சான்று.


Vavar F Habibullah

No comments: