Sunday, August 13, 2017

கடின உழைப்பால் உயர்ந்த இவரைபற்றி சில நிமிடங்கள் உங்களுடன்

Mohamed Gaffoor
அஸ்ஸலாமு அலைக்கும்...
படத்தில் நீங்கள் காண்பது
என் உடன்பிறவாதம்பி
மீரான் பாபு ஹீசைன் Meeran Babu Hussain
கடின உழைப்பால் உயர்ந்த இவரைபற்றி
சில நிமிடங்கள் உங்களுடன்...
.
1992/1993/1994... போன்ற காலகட்டங்களில் உகாண்டாவில்
இருக்கும் நபரிடம் அங்கு வந்தால்
ஏதாவது வேலை கிடைக்குமா என்று
கேட்டால் வேலை கிடைக்கும் தங்குவதற்க்கு இடம்தான் கஷ்டம்
என்பார்கள் ஏன் என்றால் வாங்கும்
சம்பளத்தை விட மாதவாடகை இரண்டு
மடங்கு அதிகம் அதிலும் மூன்று மாத
வாடகை கொடுக்கவேண்டும்
இதெல்லாம் அப்போதய சூழ்நிலையில்
கஷ்டமான காரியம்
அப்படி பட்ட சூழ்நிலையில் தம்பி
(
(இங்கிலீஷ் பாபு..ஏன் இவரை இப்படி
அழைப்பார்கள் என்றால் பள்ளி பருவத்திலேயே ஆங்கிலம் சரளமாக
பேசுவார்..ஆகவே அப்படி ஒரு பெயர்..)
பாபு அவர்கள் ஒரு தங்கும் அறையை
வாடகைக்கு எடுத்து ஊரிலிருந்து
உகாண்டாவிற்க்கு யார்வந்தாலும்
அவரது ரூமில் தங்க வைத்து வேலையும்
எடுத்து கொடுத்த புண்ணியவாளன்
அவரும் பல முதலாளிகளிடமும் பணியில்
அமர்ந்து வியாபார நுணுக்கங்களை கற்று
பிறகு சொந்தமாக சிறிய அளவில்
சூப்பர்மார்கட் ஒன்றை ஆரம்பித்து பின்
நாளடைவில் அது மூன்று நான்கு சூப்பர்
மார்கட்டாக பரிணாம வளர்ச்சி அடைந்தார்
அப்பொழுதும் அவர்சும்மாஇருக்கவில்லை
முதலில் சிறிதாக காய்கனிகளை
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்
தொழிலில் கால்பதித்து இன்று சொந்தமாக உகாண்டாவில் இடம் வாங்கி
அதில் காய்கனிகளை பயிரிட்டு வெளி
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்
அதுமட்டுமல்லாமல் வியாபார நிமித்தமாக
நான் அறிந்த அளவில் குறைந்த து
25 நாடுகளுக்காவது சென்று வந்து
இருக்கும் கோடீஸ்வரன்
இவருடைய சிறப்பம்சம்
தம்மிடம் வசதி இருக்கிறது என்கிற
கர்வம் துளி கூட இல்லாத தம்பி
உகாண்டாவில் இவர் வீட்டிற்க்கு சென்றால்
சாப்பிட்டு விட்டே போகவேண்டும் என்று
அடம்பிடிப்பார்
இவ்வளவு வசதி வந்தபிறகும் நமதூர்
நண்பர்களை யாரைக்கண்டாலும்
வீட்டிற்க்கு வருவீயளாண்ணே என்று
பாசத்தோடு அழைக்கும் பண்பாளர்
உகா சேவாவின் ஆரம்பகால உறுப்பினர்
நிறைய நன்கொடைகளை உகாசேவாவிற்க்கு வழங்கிஇருக்கிறார்
இன்ஷா அல்லாஹ் இனியும் வழங்க
இருக்கிறார்
இவருக்கு திருப்புமுனை என்றால்
இவரது திருமணமும் இவருக்கு அமைந்த
நல்ல மனைவியும்
இவரது மனைவியும் இவரைப்போல் ஈகை
கொண்ட பெண்மணிதான்
இவர்கள் உகாண்டாவில் நிறைய பள்ளிகூடங்களுக்கும் மசூதிகளுக்கும்
தனி ஆளாக நிறைய நிதி உதவி செய்து
இருக்கிறார்கள்..நமது ஊரிலும் இவர்களின் உதவி தொடர்கிறது..
இப்படி தனி ஆளாக வெளிநாடுவசென்று
தன் வியர்வையால் பலபேருக்கு வேலை
வாய்ப்பை வழங்கிய
உழைப்பால் உயர்ந்த இந்த கோடீஸ்வர
தம்பீ நீ
இனியும் உழைப்பால் பல சிகரங்களை
எட்டவேண்டும் என்று
வாழ்த்துகிறேன்
இப்படி உழைப்பால் உயர்ந்த நிலையை
அடைந்தும் எந்த கர்வமும் இல்லாமல்
எல்லோரிடமும் பழையதை மறக்காமல்
சகஜமாக பழகும் இந்த தம்பியை
நீங்களும் வாழ்த்தலாமே.......

Mohamed Gaffoor

No comments: