Saturday, August 5, 2017

மனிதர்கள் எல்லோரும் இப்படி இருந்துவிட்டால்..................

ரஹீம் கஸாலி

ஒரு கடையில் நின்று கொண்டிருந்தேன். ஒருவர் ரீசார்ஜ் செய்ய வந்திருந்தார். அவர் நின்ற இடத்தின் நேர்கீழே ஒரு பத்து ரூபாய் தாள் கிடந்தது. நான் அதை எடுத்து அவரிடம் நீட்டியபடி
"இந்த பணம் உங்களுதா?... கீழே கிடந்தது" என்றேன்.
அதற்கு அவர் பாக்கெட்டில் இருந்ததை சரி பார்த்துவிட்டு "என் பணமில்லை" என்றார்.
கடைக்காரரிடம் "அப்படின்னா இது உங்க பணமா இருக்கும். கல்லாவில் போடுங்க" என்று சொன்னேன்.
கடைக்காரரோ "எங்கள் பணமில்லை. யாரோ தவற விட்டிருக்கணும். நீங்கதானே பார்த்து எடுத்தீங்க. நீங்களே வச்சுக்கங்க" என்றார்.

"என் பணமில்லையே" என்றபடி முதலில் நான் கேட்ட வாடிக்கையாளரிடமே நீட்டி "உங்க பக்கத்தில்தான் பணம் கிடந்தது. நீங்களே வச்சுக்கங்க" என்றேன் மீண்டும்.
"நிச்சயமா இது என் பணம் கிடையாது. எனக்கு ஏன் அடுத்தவங்க பணம்? இந்த பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு நான் எடுத்து வச்சுக்கிட்டா, தேவையில்லாமல் எனக்கு நூறு ரூபாய் செலவு வந்திடும். அடுத்தாளு பொருளுக்கு ஆசைப்படக்கூடாது" என்றார்.
"சரி நீங்க வச்சுக்கங்க. யாராவது கேட்டால் கொடுத்திடுங்க" என்று கடைக்காரரிடம் கொடுத்தேன்.
அவரும் வாங்கிக்காமல் "அது மேல வச்சுட்டு போங்க. யாராவது கேட்டால் கொடுக்கிறேன்" என்று ஒரு இடத்தை காட்டினார். மனிதர்கள் எல்லோரும் இப்படி இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதுக்குள் நினைத்தபடி கடையிலிருந்து வந்தேன்.
#ஹமாம்த்துவம்

No comments: