Friday, August 11, 2017

கனமான கோணிப்பைகள்


“எதிர்கால இந்தியாவே
ஏங்கிநிற்கும் மானுடமே
என்ன வேண்டும் உனக்கு
சொல்ல வேண்டும் எனக்கு”
சொல்றேனுங்கய்யா:

பள்ளிக்கூடச் சீருடையும்
பை நிறையப் புத்தகங்களுமாய்
கண்டு வரும் கனவொன்று
எங்களைக்
கடந்து போகுதய்யா



நடப்புல எங்களுக்கோ
கந்தலான ஓருடையும்
குப்பைக்கான கோணிப்பையும்

“படிக்காமல் நீயும்
பிடிக்காத பணி செய்யும்
பரிதாபம் ஏன்?”

ஆத்தாப் பொழப்பிலதான்
சோத்த நாங்க பாத்திருந்தோம்
அப்பனுக்கு உழைப்பில்லை
போதையில்லாப் பொழுதுமில்லை

எலும்புருக்கி சீக்கு வந்து ஆத்தா
எழுந்திருக்க ஏலவில்லை
ஆத்தாவின் தங்கையையும்
அப்பன் சேத்துக்கிட்டார்

எத்தனைதான் பொறுக்கினாலும்
எடை மட்டும் கூடாத
கோணிக்குள்ளே ஏத்தி வச்ச
குடும்ப பாரம் குறையவில்லை!
- சபீர்
http://www.satyamargam.com/

No comments: