Thursday, August 10, 2017

எனது தாய் மாமா எஸ் என் ஏ அஜீஸ் / Gajini Ayub

எஸ்.என்.ஏ.அஜீஸ் பி.ஏ.பி.எல்
எனது தாய் மாமா எஸ் என் ஏ அஜீஸ் ,தமிழ் நாடு காங்கிரஸில் முதலமைச்சர் காமராஜ் கட்சியின் தலைவராக இருந்தபோது அவருக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் பொதுச் செயலாளராகவும் , காங்கிரஸ் கட்சியின் நாளிதழான தேச பக்தன் பத்திரிக்கையின் ஆசிரியராக பணியில் இருந்தார். புதுவை மாநிலத்தின் சட்ட மன்ற தேர்தல் முழு தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்து பெறும் வெற்றியை பெற்று கொடுத்தவர். அப்போதுதான் பரூக் மரைக்காயர் முதல்வரானார் புதுவையில் !.அமைச்சர் பதவி என்பது ஒரு வட்டத்துக்குள் என்னை கட்டிப்போடும் கட்சியின் உயர் மட்ட பதவிகளே போதும் என்று கட்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்.



இந்திய தேசீய காங்கிரஸின் தொழில் அமெரிக்க அபிவிருத்தி பிரதிநிதியாக செயல் பதவியும் மாணவர் காங்கிரஸ் தலைவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர், மாநில இலக்கிய பிரிவு தலைவர் என்று எத்தனையோ பதவிகளை வகித்ததையும் விட முதல்வர் காமராஜ் அவர்களின் தனிச் செயலர் என்ற பதவியையும் வகித்தவர் .ஜவஹர்லால் நேருவின் தேசீய ஒருங்கிணைப்பு இயக்கத்தின் பிரதிநிதியாக இயங்கியவர்.

ஜெய் சங்கர், அசோகன் போன்ற திரை நட்சத்திரங்களை காங்கிரஸில் அப்போது சேர காரணமானவர்.
ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை மயிலாடுதுறை நகராண்மை கழக பள்ளி இலக்கிய செயலாளர். சென்னை லயோலா கல்லூரி மாணவர் தலைவர்.
இளைஞர் குல திலகம் ' என்ற எஸ்.என்.ஏ.அஜீஸ் வாழ்க்கை வரலாற்று நூலை தமிழக சிவாஜி ரசிகர் மன்ற அப்போதைய தலைவர் சின்ன அண்ணாமலை தன் தமிழ்பண்ணை பதிப்பகம் சார்பாக எழுத்தாளர் கலைமாமணி.ஜி.கருப்பையா அவர்களால் எழுத வெளியிட்டுள்ளார்.
கவிஞர் கண்ணதாசனும், குமரி அனந்தனும் இணைந்து அஜீஸ் பற்றி
இலக்கியத்தில் ஒரு ரோஜா என்ற சிற்றேடு ஒன்றையும் அஜீஸ் பற்றி எழுதி காங்கிரஸ் சார்பாக எழுதி வெளியிட்டதும் பழைய கதை.
சென்னை தி.நகரில்..அஜீஸ் தெரு,
கோடம்பாக்கத்தில் அஜீஸ் நகர்...இவர் பெயரில் அரசால் கெஜட்டில் அறிவிக்கப்பட்டு சூட்டப்பட்டன.
சென்னை சத்ய மூர்த்தி பவனில் அஜீஸ் அவர்களுக்கென்றே தனி அலுவல் அறை ஒன்றை முதல்வர் காமராஜ் அமைத்து கொடுத்திருந்தார்.
சிவாஜி கணேசனின் ராஜ ராஜ சோழன் 100வது நாடக காட்சி விழாவுக்கு வேலூரில் தலைமை வகித்ததே எஸ் என் ஏ அஜீஸ்தான் !

Gajini Ayub

No comments: