Saturday, September 2, 2017

கேரள முதல்வரின் கனிவு...

ஒரு முஸ்லிம் மாணவியின் மருத்துவக்கல்வி கனவு நனவாகிட ஒரு மணி நேரத்தில் சட்டத்தில் திருத்தம் செய்து உதவி செய்துள்ள கேரள முதல்வர் பிணராய் விஜயனுக்கு நன்றிகள்..
கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் தொகுதியைச் சேர்ந்த ஏழை மீன்பிடி தொழிலாளி மகள் சுல்பத் பாத்திமா. +2 வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற சுல்பத் க்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் ரூபாய் 11 லட்சம் கட்டணத்தை செலுத்த முடியாமல் மாணவியும் பெற்றோரும் வருந்தும் தகவல்கள் சபாநாயகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது..

மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட சபாநாயகர் சுல்பத் கல்வி கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தல் செய்த போது, கேரள மீன்பிடி தொழிலாளிகள் பட்டியலில் முஸ்லிம் சமூகத்தின் பெயர் இல்லாத விபரங்கள் தெரிய வந்தது..
உடனடியாக சபாநாயகர் மாணவியின் மருத்துவ கல்லூரி அட்மிஷன் விசயத்தை கேரள முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் அவசர கூட்டம் நடத்தி மீன்பிடி தொழிலாளிகள் பட்டியலில் முஸ்லிம் சமூகத்தின் பெயரை உட்படுத்திய சட்ட திருத்தம் வெளியானது...
தற்போது மாணவி சுல்பத்தின் மருத்துவ கல்லூரி ஐந்து வருடத்திற்கான கட்டணத்தையும் கேரள மீன்வளத்துறை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்த கடிதம் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது...
Colachel Azheem

No comments: