Sunday, October 1, 2017

உலக மக்கள் யாவருக்கும் உரிமை யானவர்

உலக மக்கள் யாவருக்கும்
உரிமை யானவர்
உருவமற்ற இறைவனுக்கு
உண்மையானவர்!
சிலை வணக்கம் செய்த
அரபு நாட்டிலே
சீர்திருத்த சேவை
செய்ய வந்தவர்
தலை சிறந்த ஏக
தெய்வ வீட்டிலே
தரணி வாழ வழிவகுத்து தந்தவர்
கலை வளர்த்த காவலர்
நபிகள் நாயகர்
உருவமற்ற இறைவனுக்கு
உண்மையானவர்!
கோடி கோடி செல்வம்
வந்த போதிலும்
கொண்ட கொள்கை
மாறிடாமல் நின்றவர்
ஆடையின்றி பெண்கள் அந்த நாளிலே
அலைந்திருந்த மடமை
நீங்கி வென்றவர்
ஈடில்லாத போதகர்
நபிகள் நாயகர்
உருவமற்ற இறைவனுக்கு
உண்மையானவர்!
துன்பம் வந்து தொல்லை
தந்த போதிலும்
துணிவு கொண்டு நீதி
சொன்ன வல்லவர்
பண்பு கெட்டு போர்
புரிந்த மாந்தரை
அன்பினாலே மாற்றி
வைத்த நல்லவர்
இன்ப வாழ்வு தந்த எங்கள்
நபிகள் நாயகர்
உருவமற்ற இறைவனுக்கு
உண்மையானவர்!

Abu Haashima
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரி! Muhammad (SAW) Peace be Upon his Soul முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும். إِنَّ اللَّهَ وَمَلَـئِكَـتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِىِّ يأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيْهِ وَسَلِّمُواْ تَسْلِيماً இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் 33:56) S.E.A. Mohamed Ali Jinnah,Nidur. JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

No comments: