Tuesday, October 10, 2017

​​'நீங்கள் எப்படி ஒரு தீர்ப்பை வழங்குவீர்கள் அல்லது ஒரு சர்ச்சைக்கு தீர்வு காண்பீர்கள் ?'

முஆத் இப்னு ஜபல் (RA)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஹலால் மற்றும் ஹராமில் எனது நாட்டிலேயே அதிகமான கற்றறிந்த மனிதர் முஆத் இப்னு ஜபல் (RA)' என்று தெரிவித்துள்ளார்கள்
. ஏமன் நாட்டில் அப்பொழுது மிகவும் மோசமான நிலையில் மக்கள் மிகவும் தவறுகள் செய்பவர்களாக இருந்தனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஆத் இப்னு ஜபல் (RA) அவர்களை கவர்னராக யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள் அனுப்பியபோது,
​​'நீங்கள் எப்படி ஒரு தீர்ப்பை வழங்குவீர்கள் அல்லது ஒரு சர்ச்சைக்கு தீர்வு காண்பீர்கள் ?' என்று கேட்க
'நான் குர்ஆனில் காண்பதிலிருந்து தீர்வு காண்பேன் ' என்று முஆத் இப்னு ஜபல் (RA)) தெரிவித்தார்கள்
நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீங்கள் குர்ஆனில் தேடிக் கொண்டிருக்கும் ஆணையை நீங்கள் காணாவிட்டால் என்ன செய்வீர்கள்?'
நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவின் வழியில் தீர்வைக் கொடுப்பேன் என்று முஆத் இப்னு ஜபல் (RA) தெரிவித்தார்கள்
'நீங்கள் ஸுன்னாவிலும் கூட ஒரு தீர்ப்பைக் காணவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?'
'என் அதிகாரத்தில் மிகச் சிறந்ததைக் கொண்டு, நான் நியாயமாகக் கையாள்வதன் மூலம் மனிதர்களிடையே தீர்ப்பளிப்பேன்.'என்று முஆத் இப்னு ஜபல் (RA) தெரிவித்தார்கள்
----------------------------------------------------------------------

7172. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னையும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது, '(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள்; (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள்' என்றார்கள்.
Volume :7 Book :93

1395. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் முஆத்தை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!' என்று கூறினார்கள்.
3038. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், 'நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள்' என்று (அறிவுரை) கூறினார்கள்.
Volume :3 Book :56
7172. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னையும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது, '(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள்; (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள்' என்றார்கள். அப்போது நான், 'எங்கள் (யமன்) நாட்டில் 'பித்உ' எனும் (மது) பானம் (தேனில்) தயாரிக்கப்படுகிறதே!' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்' என்றார்கள்.37
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Volume :7 Book :93

No comments: