Wednesday, October 11, 2017

நான்கு தோப்புகள் வைத்திருப்பதும் .....

Iskandar Barak

நான்கு தோப்புகள் வைத்திருப்பதும்
நான்கு பெண்பிள்ளைகள் வைத்திருப்பதும் ஒன்னுதான் யென்பார் ..எங்க தெரு நாகப்பன் தாத்தா
இது போலவே ...
நான்கு காடுகள் வைத்திருப்பதும்
நான்கு ஆண்பிள்ளைகள் வைத்திருப்பதும் ஒன்னு யென்பார் ..எங்க மச்சான் முத்துமுஹம்மது
இரண்டுக்குமுள்ள வித்தியாசம் இதுவே ...
தோப்புகளில் எப்போதும் வருமானமிருக்கும் வசந்தமிருக்கும் சின்ன சின்ன உழைப்புகளே போதுமானு அது போலவே ..பெண் பிள்ளைகள்
கட்டிக்கொடுத்து போனாலுமே தன் தாய் தந்தையை விட்டு டீ கூட குடிக்காது போன்பண்ணி கேக்கும் டீ குடிச்சிங்களாப்பா டீ குடிச்சியாம்மா சாப்டியாம்மா அப்பா எங்க னு ..இந்த பாசமே பெரிய வருமானம் யென்பார் நாகப்பன் தாத்தா
காடுகளில் மழை பெய்தால் தான் வருமானமே அதுவும் கடின உழைப்பு வேர்வை சிந்தினாலே வரும் ...அதுபோலவே தான் இந்த ஆண்பிள்ளைகளிடம் அண்டிவாழ்வதும் வயிறு கழுவி காலம்கடத்துவதும் ..சாப்டிங்களாப்பானு ஒருவார்த்தை கேட்கமாட்டானுக அம்மா டீ குடிக்கிறியானு கேப்பானா னு அம்மா ஏங்கவேண்டிவரும் ...எப்பவாவது அப்பா வா அம்மா வா சாப்டலாம் வெளிய ஷாப்பிங் போலாம்னு கூப்டுவானுக அதுவும் பல வருடங்கள் கழித்தே.
இந்த உவமையை தான் பெண்பிள்ளைகளை பெற்று அனுபவித்த நாகப்பன் தாத்தாவும் ஆண் பிள்ளைகளை பெற்று அனுபவித்த முத்துமுஹம்மதுவும் நமக்குச்சொல்கிறார்கள்
நாம இனிதானே அனுபவிக்கனும் ..இருந்தாலும் அனுபவசாலிகளின் இந்த சொல் எந்தளவிற்கு உண்மையென்பதை .............இன்று
மகள்கள் தினமென நம்ம தல அஜ்மல்கான் சொல்லியதால் இந்த பதிவினை தந்து உங்கள் கருத்தினை கேட்க விரும்புகிறேன்
சொல்லுங்க ...பெண்களை ஆண்களை பெற்ற மவராசன் மவராசிகளே
நாகப்பன் தாத்தாவும் முத்துமுஹம்மதுவும் சொல்வது எந்தளவிற்கு உண்மை
?
Iskandar Barak 

No comments: