Wednesday, October 11, 2017

உலக பெண் குழந்தைகள் தினம் ...

சில நிமிட சிந்தனைகளில் உருவான எண்ணங்களால் வடித்துள்ள இந்த பதிவுக்கு கிட்டுவது வெற்றியா (அ) தோல்வியா என்பது உங்களது விரல்களில் ஒளிந்து கிடக்கிறது ...
பேரிறைவனின் பேரருளால் பெண் குழந்தைகள் பிறந்தால் பறக்கத்தும் ரஹ்மத்தும் இணைந்தே பிறக்கும் என்பதை பிரசவிக்கும் பெரும்பாலான தாய்மார்கள் மகிழ்வோடு அனுபவித்து உணருவார்கள் ....
நமது இல்லங்களில் பெண் குழந்தைகள் நடமாடி ஆரவாரமாய் துள்ளி விளையாடினால் உண்மையிலே அந்த தருணங்கள் நமக்கு குதூகலங்களை அள்ளித் தரும் ...

ஆண் குழந்தைகளுக்கு ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பதைவிட பெண் குழந்தைகளுக்கு வண்ண வண்ண ஆடைகள் அணிவித்தும் வளையல்கள் காப்புகள் கம்மல்கள் நெத்திச்சுட்டிகள் போன்ற விதவிதமான நகைகள் அணிவித்தும் ஜடைகள் பின்னி மணக்கும் மலர்கள் சூட்டியதும் குழந்தைகள் ஜாடைகள் காட்டி நடந்து வரும் அழகை பார்ப்பதில் ஆஹா பெற்றோருக்கும் மற்றோருக்கும் அளவில்லா பேரானந்தம் ...
பெண் குழந்தைகள் வளர்ந்து பருவமெய்தி திருமணம் முடிந்து புகுந்த வீட்டுகளுக்கு இன்னொரு மகளாகவே செல்லும் பல பெண்களை கண்டு நாம் ஆச்சரியமாய் மகிழ்வதுண்டு ....
பெற்றெடுத்த தாய்க்கு உடல் நலக் குறைவு ஏற்படுகையில் பெண் குழந்தை தாயாரின் அருகமர்ந்து பணிவிடைகள் செய்கிற தருணத்தில் தாயுள்ளம் அடைகிற மகிழ்ச்சியை அளவிட அளவு கோல்கள் இல்லை ....
ஈன்றெடுத்த தாயையும் தந்தையையும் சம்மந்திகளாகவும் கண்ணாப்பா கண்ணும்மாவாக பதவி உயர்வு பெறுகிற தகுதியினை விரைவாக வழங்குபவர்கள் பெண் குழந்தைகளே என்றால் அது மிகையாகாது ....
மகளாக மருமகளாக தாயாக மாமியாராக கண்ணும்மாவாக வாப்பம்மாவாக ஜொலிக்கும் அவதாரங்கள் பெறுகிற ஆதாரங்கள் பெண் குழந்தைகளிடம் உண்டென்பதும் நமது இல்லங்களின் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களில் பெண் குழந்தைகளும் உள்ளடங்குவர் என்பதும் அவர்களுக்கே உரித்தான கூடுதல் பாக்கியங்கள் ...
அன்புடன்
அப்துல் கபூர்
11.10.2017 ....

No comments: