Friday, October 13, 2017

உணர்வின் ஒலிவடிவம் ....!

உணர்வின் ஒலிவடிவம் ....!
மொழி மனிதர்கள் உணர்வுகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் ஒரு ஒலிவடிவம்.
உகாண்டா காரருக்கு தமிழ் தெரிந்திருக்க அவசியமில்லை. அவர்கள் நாட்டில் வாழும் தமிழனாக எனக்கு அவர்களின் மொழியை தெரிந்துகொள்வது ஒரு அடிப்படை தேவை. இங்கு பேசப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் குறைந்தது பத்து மொழிகளை பேச முடியும் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன் மொழிகள் மனிதர்களை இணைக்கவேண்டும் பிரிக்கக்கூடாது.

நம் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி உண்டு அதை உயிராய் நேசிப்போம் அதுபோலவே மற்ற மொழிகள் யாவும் சகோதர மொழிகளே.
மொழிகளை நேசிப்பது மனிதத்தை நேசிப்பதாகும்.
உகாண்டா மொழிகளிலும் தமிழ் சொற்கள் ஒலிவடிவிலும் பொருள்கொண்டும் பரவிக் கிடக்கின்றன.
நேரம் கிடைக்கும்போது விரிவாக எழுதுகிறேன்
நான் உகாண்டா வந்துதான் இந்திய மொழிகளான ஹிந்தியும் குஜராத்தியும் பேசுவதற்கு மட்டுமாவது கற்றுக்கொண்டேன்.

உகாண்டா நினைவுகள் ....!
ராஜா வாவுபிள்ளை

No comments: