Tuesday, November 28, 2017

வாழ்வியல் தத்துவங்கள் !


மனதின் மாசை மாற்று
எண்ணத்தில் எழிச்சி வரும் !

பார்வையில் பரிவுகாட்டு
பந்தங்கள் சேர்ந்திருக்கும் !!
*
எண்ணத்தை நேர்படுத்து
செயலை சீர்படுத்து !

வாழ்வில் வளம்சேரும்
வாழ்வாங்கு வாழ்ந்திடலாம் !!

*
தனம் சேர்
தானம் செய் !

இம்மை வளமாகும்
மறுமை சுவனமாகும் !!
*
உன்னில் நில்
உள்ளத்தில் உறுதி கொள்

உடலில் உரமேற்று
உலகை எதிர்கொள்
*
விதையாய் விழு
விருட்சமாய் எழு !

மழைதரும் வரம்பெறு
யாவரும் போற்றும்படி வாழு !!
*
தகுதி வளர்
தனித்துவம் பேணு !

தப்பிதம் விலகும்
தன்னிறைவு பெறலாம் !!
*
சிரம் தாழ் த்து
சிந்தனை உயர்த்து !

உடல் உழைப்பை பெருக்கு
உன்னதமான வாழ்வை மேற்கொள் !!
*
துன்பம் கண்டு ஒழியாதே
துயரம் கொண்டு துவளாதே !

வருமுன் காப்பது நன்றாகும்
வந்திடின் எதிர்கொள்வது வீரமாகும் !!
*
பயிற்சி எடு
முயற்சி செய் !

முன்னேற்றம் காண்
வெற்றியை ருசி !!
*
அச்சம் விடு
துணிவை எடு !

தன்மானம் பேணு
தனித்தாலும் உரிமையை விடாதே !!
*
வெறுப்பவரை விட்டுவிலகு
மதிப்பவரை சேர்த்துக்கொள் !

தடைகளை தகர்த்துஎறி
வேண்டியவை உனதாகும் !!
*
இளையவரை தூக்கிவிடு
மூத்தவரை தூக்கிச்செல் !

முன்னேற்றம் முந்திவரும்
முன்னுக்குப்பின் முரணாகாது !!
*
எளியோரிடம் பரிவுகாட்டு
வலியோரிடம் வாழ்ந்துகாட்டு !

தடைகளைத்  தகர்க்க துணிவுகாட்டு
தங்குதடையின்றி முன்னேறிச்செல் !!
*
நயம்பட பேசு
நன்மையை நாடு !

நான்கும் தெரிந்துகொள்
நல்லோனாய் நாடுபோற்ற வாழு !!
*
நட்பு கொள்ளு
நம்பிக்கை வை !

நாணயம் பேணு
நன்மை தேடிவரும் !!
*
புன்சிரி உதிர்
உள்ளத்தை திற !

உவகையை பகிர்
உலகையே உனதாக்கு !!
*
நன்றியை நவில்
அன்பைப் பகிர் !

மனப்புழுக்கம் விரட்டு
அமைதி வாழ்வில் குடியேறும் !!
*
பிரச்சனையை அலசு
ஆத்திரத்தை விலக்கு !

புத்தியை தீட்டு
செயலில் சீர்பெறுவாய் !!
*
அலைபாயும் மனம்
அக்கறை இல்லாது அலையும்

இலக்குள்ள மனம்
இன்ன ல் கள் விலக்கி  கரைசேரும்
*
நேர்நோக்கி நட
கண் பார்த்து பேசு !

கள்ளமில்லா செயலாற்று
வாழ்வெல்லாம் ஒளிமயமாகும் !!
*
நிதானம் பேணு
நேர்மை கடைபிடி !

நிம்மதி தேடிவரும்
நிதர்சன வாழ்வு பெ று !!
*
பசித்தபின் புசி
உழைப்பால் உண்ணு

ஆரோக்யம் உன்னோடிருக்கும்
உணர்வும் உடலும் இளமை யுடன் உறவாடும் !
*
சிந்தித்தபின் பேசு !
திட்டமிட்டபின் செயலாற்று

செயலில் திறமைக்காட்டு
வெற்றிமேல் வெற்றியை அள்ளு !!
*
உன்னை மதி
அனைவரையும் நேசி !

உலகே மகிழ்வாகும்
வாழ்க்கை இனிதாகும் !!
*
உணர்ச்சியால் வித்திடு
உழைப்பால் வழிவகுத்திடு !

உண்மையாய் வாழ்ந்திடு
உலகம் உய்த்திட உதவிடு !!
*
அதிகாலை துயிலெழு
வெகுதூரம் செல்லலாம் !

சவாலை எதிர்கொள்
சாதனைகள் படைக்கலாம் !!
*
பிரச்சனையை எதிர்கொள்
தீர்வுகளை கண்டறி !

தாமதமின்றி செயல்படுத்து
சுகபோகம் உடனிருக்கும் !!
*
சவடால் விடுபவன்
சாதிக்க மாட்டான் !

சாதித்து காட்டுபவன்
சளைக்க மாட்டான் !!

*
அளந்து  பேசு
அளவில்லாமல் செயல்படு !

வீண்விரயம் நிறுத்து
வேண்டியது எல்லாம் கிட்டும் !!
*
எளியோர்க்கு இரங்கு
ஏளனம் நிறுத்து !

எளிமை ஏற்றெடு
நலமாய் வாழ்ந்து காட்டு !!

*
உழைத்து பெறுவதில்
திருப்தி கொண்டு
இல்லாதவர்க்கு பகிர்வதில் மகிழ்வு கொள்ளு
*
கேள்விகளை கேட்கப்படி
விடைகளை தேடிப்பிடி !

ராஜா வாவுபிள்ளை


No comments: