Monday, November 27, 2017

சில்லென சிலிர்க்க வைக்கும் குவைத்

மேற்குதொடர்ச்சியின் கோடைக்கானலும் நீலகிரியின் உதகையும் ஒன்றிணைந்து சங்கமித்து வந்ததுபோல் ஓர் உணர்வு இன்று!
தென் பொதிகையாம் திருக்குற்றாலத்தின் சாரல் கரும் முகிலாய் மாறி! சற்றே தள்ளி பயணித்து அரபகமாம் குவைத்திற்குள் நுழைந்து! தான் வாரி வந்த நீரையெல்லாம் வீதிதோறும் வீச! பாலை நிலமெங்கும் ஒரே மழை வாசம்!
உதயம் வந்த வேளையிலும் பகலவனை காணவில்லை! அவன் உச்சி மாறும் வேளையிலும் எங்கு சென்றான் புரியவில்லை! அந்தி மங்கும் நேரத்திலும் அவன் முகமே தெரியவில்லை!

அப்படியே கருப்புமின்றி வெளுப்புமின்றி விம்மல் கூடி! திரைமறைவின் பெண்ணாகி தான் கொண்ட பேரழகு தாளாமல் தன் தலை குணிந்து வெட்கி நிற்கின்றாள் வானமகள்!
மலையொத்த அவள் வண்ணம் இன்னும் கூடி கலைந்த கேசமாய் மாற! ஆங்கே அவள் முகம் கண்டு மாலை வந்து மையல் கொள்கிறது!
சில்லென்ற தென்றல் வீசி இசையமைக்க! வீசிய சாரலும் சாரீரம் போட! இங்குள்ளோர் யாருவரும் தங்கள் சரீரம் அசைய அதற்கு பொருத்தமான மெட்டில் பல்லவியுடன் சேர்ந்த சரணம் அமைத்து பாடினர் இப்படி!
"ஆகா...குவைத்திற்கு வந்துவிட்டது குளிர் இன்று முதல் என்று" 🎻
குவைத்திற்குள் நுழையும் வசந்தகாலமே! வருக...வருக..!

என உனை வாழ்த்தி நானும் வரவேற்கிறேன்!
Samsul Hameed Saleem Mohamed

No comments: