Sunday, December 3, 2017

அகிலத்தின் அருட்கொடை பெருமானார் மனிதர்களின் முன் மாதிரி மா மனிதர்

- தமிழ்நெஞ்சம் அமின்


மீலாது நபி (நபி பிறந்த நாள்)சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஃபத்வாக்கள்
கடவுளைப்பற்றி சொன்னவரெல்லாம்
கடவுளாகிவிட்டனர். ஆனால்
கடவுளைச்சொன்ன
கடவுளாக்கப்படாத
ஒரே மதத்தலைவர் யார்?

ஒரு மதத்தை
புனரமைத்த தலைவருக்கு
14 நூற்றாண்டுகளாக
ஒரு சிலையோ உருவமோ
இல்லையே யார் இவர்?

இவரின் பெயர்
24மணி நேரமும்
உலகெங்கும் ஒலிக்கிறதே
யார் இவர்?



14 நூற்றாண்டுகளாக
சிலையோ உருவமோ ஆக்கப்படாத
ஒரே ஒரு அரசியல் தலைவர்,
ஒரே ஜனாதிபதி,
ஒரே சக்கரவர்த்தி,
ஒரே ஒரு உச்சநீதிமன்ற நீீதிபதி
யார்?

மனிதன் என்றால் தவறுவரும்!
அவன் எழுதும் புத்தகத்தில்...
அவன் கருத்தில்...
ஆண்டுகள் செல்ல செல்ல
பல திருத்திய படைப்புகள்
வெளியிடுவார்கள்.

ஆனால் 14 நூற்றாண்டுகளாக
இவர் சொன்ன செய்தியான ஒரு நூல்
ஒரு எழுத்து
ஒலி
அர்த்தம்
ஏதும் பிசகாமல்
மாற்றத்திற்கு அவசியம் இல்லாமல்
அப்படியே இருக்கிறதே.

திருத்திய...
திருத்தப்பட்ட...
விரிவாக்கப்பட்ட...
சுருக்கப்பட்ட...
பிழை நீக்கப்பட்ட
பதிப்பே இல்லாமல்
இன்று வரை இருக்கிறதே...

காலத்திற்கேற்ப மாறாமல்
மாற்ற அவசியம் இல்லாமல்
அப்படியே இருக்கிறதே...

அதன் பொருளும் அர்த்தமும்
எல்லா காலங்களுக்கும்
பொருந்தி வருகிறதே...

அறிவியியலை மிஞ்சுகிறதே...
இந்த நூல் அது எப்படி?

இதை
எப்படி ஒர்
எழுதப்படிக்க தெரியாத ஒரு
நபர் சொல்லியிருக்க முடியும்?

அதுவும் ஆறாம் நூற்றாண்டில்!

ஒரு சிறந்த மாவீரன் என்ற பெயர்ப்பெற்ற
இவறுக்கு ஒரு சிலை கூட இல்லையே
யார் இவர்...!

உணவுக்காக
தம் இரும் சட்டையை
அடகு வைத்த
சக்கரவர்த்தி யார்?

இவர் கால் பதிக்காத
இடத்திலெல்லாம்-இவர்
சொன்ன கொள்கை
எப்படி கால் பதித்தது?

அதுவும்
அறிவியல் வளர்ச்சியே
இல்லாத அந்த காலத்திலே

சிந்தியுங்கள்.....!

எப்படி
ஒரு ஆறாம் நூற்றாண்டில்
வாழ்ந்த ஒரு மனிதர்
சொன்ன செய்தி
இன்றும்
பரவி விரிந்து வளர்ந்து
கொண்டிருக்கிறதே...!

என்ன காரணம்?

அவர் சொன்ன
நூலைதான்
சிறிது புறட்டுங்களேன்

எப்படி ஆறாம் நூற்றாண்டில்
வாழ்ந்த மனிதர்
21ஆம் நூற்றாண்டில்
நடக்கும் செய்திகளை
அப்படியே முன்னறிவிப்பு
செய்திருக்க முடியும்?

இதையெல்லாம் மீறி
இவரை
சமூக சீர்திருத்தவாதிகளின் தந்தை
என்று அழைக்கிறார்கள்
என்றால்
இவர் சொன்ன
சட்டங்கள்,
செய்திகள்,
அறிவுறைகள்
இன்றும் அமெரிக்கா முதல்
இந்தோனேஷியா வரை
பின்பற்றப்படுகிறது.

யார் இவர்?

உருவத்தில் வாழாமல்
உள்ளத்திலே வாழும்
இவர் யார்?

அரேபிய துணை கண்டத்தின் ஜனாதிபதி
பேரரசர்
சக்கரவர்த்தி
உச்சநீதிமன்ற தலைமை நீீதிபதி
இஸ்லாமிய மார்கத்தைபுனரமைத்த தலைவர்
சமூக சீர்திருத்தவாதிகளின் தந்தை
நானயமான வணிகன்
தத்துவவாதி
வாய்மையான பேச்சாளர்
போர் வீரர்
இராணுவ தலைவர்
கொடையாளி
மனித நேய செம்மல்
சிறந்த குடும்பத்தலைவர்
அகிலத்தின் அருட்கொடை
பெருமானார்
மனிதர்களின் முன் மாதிரி
மா மனிதர்
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்)

உன்மையான இஸ்லாத்தை அறிந்துக்கொள்ள திருக்குரானையும் இந்த மாமனிதன் நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) வாழ்க்கை வரலாற்றையும் படித்துபாருங்கள்.

   
   - தமிழ்நெஞ்சம் அமின்

No comments: