Saturday, December 30, 2017

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அன்புடன் புகாரி அவர்கள்



அன்புள்ள புகாரி அண்ணன் அவர்களுக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும்.
------------------
அன்புடன் புகாரி அவர்கள்
என்னை பாசத்துடன் உறவு முறையாக அண்ணா  என்றுதான் அன்புடன் அழைப்பது வழக்கம்
கவிஞர் . அன்புடன் புகாரி என்று உயர்வான பெயருடன் புறப்பட்டு தமிழுக்கும் மக்களுக்கும் சேவை ஆற்றும் நேசிக்கப் படக்கூடிய நண்பர்
அன்புடன் புகாரி  ஒரு சிறந்த கணினி பொறியாளர் ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரின் தாயை அவரே அறிமுகப்படுத்துகின்றார் கேளுங்கள்
"என்னை அறிமுகப் படுத்திய என் தாயை நான் அறிமுகப் படுத்த விரும்புகிறேன்'"-அன்புடன் புகாரி 

அன்புடன் புகாரி

ஒரத்தநாடு - அன்புடன் புகாரி பிறந்த ஊரு

பாசத்துடன் புகாரியின் பேசும் குரல்.
அன்புடன் புகாரி
நான் பிறந்த ஊர்
வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் வளையும் தேனூறி பூவசையும் தினம்பாடி வண்டாடும் காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும் பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில் நான் பிறந்தேன்

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால் சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.

தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

என் ஊரைப்பற்றி நான் சொல்லிவிட்டேன் என்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும்.

http://anbudanbuhari.blogspot.in/
--------------------
http://nidurseasons.blogspot.in/

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.


மறுக்கும் இடத்தில் மன்றாடுவதல்ல வாழ்க்கை கொடுக்கும் இடத்தில் கொண்டாடுவதுதான்
- அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி   கவிதைகள் ,கட்டுரைகள் அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவைகள் பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
அண்ணன் அன்புகாரி அவர்களைப்பற்றி நிறைய அறிய
இதனை சொடுக்குங்கள் கிளிக் செய்யுங்கள் 
இறைவன் அருளால் தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தார் அனைவரும்   மக்களுக்கும் ,தமிழுக்கும் சேவை செய்து நலமாக நீடித்து  வாழ ஆண்டவனை இறைஞ்சுகின்றேன் .
உங்கள் நினைவில் என்றும் இருக்கும்
அன்புடன்

முகம்மது அலி ஜின்னா

No comments: