Monday, December 4, 2017

ஞானம் ஒரு பூரணம் நிறைந்த ஞான குருவால் மட்டுமே தர முடியும்.


புத்தகம், இன்டர்நெட், பேஸ்புக், வாட்சாப், டுயூட்டர் மற்றும் எந்த வழிகளில் ஞானம் என்று படிக்கிற அனைத்தும் செய்திகள் தானே தவிர ஞானம் அல்ல. ஞானம் என்று எழுத்தின் மூலம் உங்கள் அறிவை அடைவதும்,  வார்த்தைகள் வழியாக உங்கள் செவியை சேர்வதும் இப்படி வரக்கூடிய அனைத்தும் ஞானம் அல்ல.

ஏனென்றால் ஞானம் என்பது இதயத்தில் இருந்து இதயம் அடைவது. ஞானத்தை பெறக்கூடியவர் ஏற்க்கும் நிலையில் இருக்க வேண்டும். ஞானம் என்று படித்த செய்திகளால் நிறைந்த கோப்பையாக இருக்கக்கூடாது. வெறும் கோப்பை அதாவது சீடராக இருக்க வேண்டும். ஞான குரு தேடி கிடைக்கக் கூடியவரல்ல, சீடர் ஏற்கும் நிலையில் இருந்தால் சூஃபி ஞான குரு அங்கே இருப்பார்.



ஞானத்தின் உச்ச நிலை பேச்சான வஹ்ததுல் உஜுத் , வஹ்ததுல் ஷுஹுத் வெறும் செய்திகளாக மட்டுமே வளம் வருகிறது. அது ஒவ்வொருவரிடமும் செய்திகலாகவே இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே சொன்னால் வஹ்ததுல் உஜுத், வஹ்ததுல் ஷுஹுத் வெறும் கடை சரக்காக மாறிவிட்டது.

தன்னையும், ஞான குரு வையும் தெரியாதவர்கள் கூட வஹ்ததுல் உஜுத், வஹ்ததுல் ஷுஹுத் பேச, எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

ஞானம் ஒரு பூரணம் நிறைந்த ஞான குருவால் மட்டுமே தர முடியும்.

هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ 
கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார்.
(அல்குர்ஆன் : 62:2)

*மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப் ஆலிம்
உஸ்மானி
கலீபத்துல் காதிரி வஷத்தாரி.
மேலப்பாளையம்.*

No comments: