Wednesday, January 17, 2018

ஹஜ் மானியம்

Vavar F Habibullah ( dr.habibullah )




தமிழ்நாடு அரசின் ஹஜ் கமிட்டி உறுப் பினராக பல வருடங்கள் நான் பணி
யாற்றி இருக்கிறேன்.அமைச்சர் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட் டங்களில் அரசின் இலவச மானியம் பற்றி சில புகழுரைகள் நிகழும்.மிக அருமையான நேர்மையான அரசு அதிகாரி, அகமது ஐஏஎஸ் அப்போது தமிழ் நாடு ஹஜ் கமிட்டியின் செயலாளராக இருந்தார்.இந்த மானியத்தில் நிகழும் சில ஒழுங்கீனங்கள் பற்றி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளில் நியாயம் இருந்தாலும் அரசு அதிகாரி என்ற நிலையில் அவரால் எதுவும் செய்ய இயலாது.இந்திய அரசின் முழு கட்டுப் பாட்டில் இயங்கும் அரசு டிராவல் ஏஜன்சி போன்றே தமிழ்நாடு ஹஜ்கமிட்டி செயல்பட்டு வந்தது.

ஹஜ் விண்ணப்பங்களை வழங்குவது குர்ரா தேர்வு முறையில் ஹஜ் யாத்திரிகர்களை தேர்வு செய்வது தேர்வு பெற்றவர்களிடம் பயணத்திற்கான காசாலையை பெறுவது பயண ஏற்பாடுகளை கவனிப்பது ஹஜ் பயணிகளை
மாலை அணிவித்து வழி அனுப்பி வைப்பது என்பதோடு அதன் பணிகள் நிறைவு பெற்று விடுகின்றன.
ஹஜ் கமிட்டி மூலம் 70 சதவீத பயணிகளும் பிரைவேட் ஏஜன்சி மூலம்
30 சதவீத பயணிகளும் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர்.தனிபட்ட முறையில் செல்பவர்களுக்கு எவ்வித அரசு மானியமும் கிடையாது. அவர்கள்
தங்களுக்கு பிடித்தமான விமானத்தில் பயணிக்கலாம். ஆனால் ஹஜ் கமிட்டி
முலம் செல்பவர்கள் ஏர் இந்தியா விமானங்கள் மூலம்தான் கண்டிப்பாக பயணிக்க வேண்டும். அரசின் இலவச மானியம் என்பதே ஹஜ் பயணிகளின் பெயரில் மறைமுகமாக ஏர் இந்தியா நிறுவனத்தை சென்றடைகிறது. இந்த
மானியம் ஹஜ் யாத்ரீகர்களுக்கு எவ்வித பயனையும் நேரடியாக அளிப்பதில்லை.அரசு அவர்களது பயணத்திற்க்கு மானியம் வழங்கும் விவரம் கூட அவர்கள் அறிவதில்லை.சொன்னாலும் புரிவதில்லை. அதிக விலைக்கு டிக்கட் விலையை உயர்த்தி மானியம் என்ற பெயரில் மோசடி செய்யும் அரசின் ஏர் இந்தியா தந்திரங்களை ஹஜ் பயணிகள் சற்றும் அறிவதில்லை. கேரள ஹாஜிகளுக்கு கிடைக்கும் வசதிகள் கூட தமிழ்நாடு ஹாஜிகளுக்கு கிடைப்பதில்லை. புனித நகரங்களில் அவர்கள் படும் அவஸ்தைகளுக்கு எல்லையே இல்லை. இதை வெளியில் அவர்கள் சொல்லாமல் இருக்க ஹஜ் வாலண்டியர்கள் அதிக சிரத்தை எடுத்துக்கொள்கின்றனர்.சில நேரங்களில் மூளைச் சலவையும் செய்கின்றனர்.

“ஹஜ் புனித யாத்திரைக்காக மத்தியஅரசு வழங்கும் மானியத்தில் ஏர் இந்தியா நிறுவனமே அதிகம் பயன்அடைகிறது.யாத்ரீகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன் இல்லை என்று பகிரங்கமாகவே மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தனது அறிக்கையில் தெளிவு படுத்தி இருக்கிறார்.”

பிறரிடம் எந்த உதவியையும் நாடாமல் தன் சொந்த செலவில் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கானபண வசதியும் உடல் ஆரோக்கியமும் உள்ளவர்களே ஹஜ் பயணம் மேற் கொள்ள தகுதி பெற்றவர்கள் என்று இஸ்லாம் தீர்க்கமாக வரையறுத்து தீர்ப்பு வழங்கியிருப்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விசயமாகும். இங்கு பண வசதி அதிகம் பெற்ற மகன் கூட தன் செலவில் தன் தாய் தந்தையரைக் கூட ஹஜ் பயணத்திற்கு அழைத்து செல்வதற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆயிரம் சொன்னாலும் உடல் வலிமை இல்லாதவர்களால் ஹஜ் கடமையை ஒழுங்காக நிறைவேற்ற இயலாது என்பதே முழ உண்மை.

Vavar F Habibullah

No comments: