Sunday, March 11, 2018

முன்னேற்றத்தின் தேடலில் / தேடல் ....! (பாகம் - 6)

*
முன்னேற்றத்தின் தேடலில்
மூத்தோரை நாடினேன்
வழிகாட்டினர் இருந்தாலும்
விடாமுயற்சியில் கண்டேன்
*
நன்மையின் தேடலில்
நாற்புறமும் நோக்கினேன்
கிடைத்ததை விருப் பாக்க
இனிதாகக் கண்டேன்
*

சத்தியத்தின் தேடலில்
சாத்திரங்களை படித்தேன்
சாதித்தது ஏதுமில்லை
படைத்தவனிடம் கண்டேன்
*
யதார்த்தத்தின் தேடலில்
எதிர்பட்டதில் இறுமாந்தேன்I
எள்ளிநகையாடிய மண்ணுலக
மாந்தரில் கண்டேன்
*
ஒழுக்கத்தின் தேடலில்
ஓயாது ஓடினேன்
ஓய்ந்து நின்றதும்
என்னில் தொடங்கினேன்
*
மாண்பின் தேடலில்
மாந்தரை நாடினேன்
மாய்த்துவிடவே மோதினர்
சுய அன்பில் கண்டேன்
*
மனநிம்மதியின் தேடலில்
எங்கெல்லாமோ அலைந்தேன்
சுற்றுச்சூழலில் நிறைந்திருக்கும்
இயற்கையில் கண்டேன்
*
இனியவற்றின் தேடலில்
மாயைகளை நாடினேன்
நிதர்சனம் என்னிலிருக்க
இனியவை கண்டேன்
*
முக்தியின் தேடலில்
முகஸ்துதிகளில் மூழ்கினேன்
இறைநேசத்தில் கிடைக்கும்
பரவசத்தில் கண்டேன்
*

Abdul Kader Sangam
 <sangamsak@gmail.com>

No comments: