Sunday, March 18, 2018

துளித்துளியாய்...... தொட்டணைக்கும்


துளித்துளியாய்......
தொட்டணைக்கும்
மழைத்துளிகள்
அத்தனையிலும்
உயர் துளியாதென
ஒரு முறை யோசித்தேன்.!!
வண்டுண்ணும் பூவிதழ் தீண்டிய
வாசணைத் துளியதுவா..?
இல்லை !...
வாய்க்காலுடன்
வரப்பும் சேர்ந்து
........யாசிக்கும்
வறுமைத்துளியா..?

இல்லை!...
கண்டுண்ணும்
கரிசல் நிலத்தாள்
கவலைத்துளியா..?
இல்லை !....
கடல் வாழ்
நத்தையீழும்
முத்தவளின்
கர்ப்பத்துளியா..?
இல்லை!...
கங்கை கலந்த துளியா..?
இல்லை!!...
காவிரியாளை நனைத்தத் துளியா ..?
இல்லை..இல்லை !!...
காடுடை......
வனமொடு சேர்ந்து
கரைவாழ் ........
வளங்கள் யாவும்
வேறுடைத் தரித்தணிய
வேரிட்ட அடைமழைத்துளியா..?
இல்லை !...
வேறெவை எம்
பாருள்ளோர் பாவம்
கறைக்கும் துளி யெனில்....
சீருடைப்பருவம் தவறாமல்
பாரவளின் புருவம் தொட்டு
நீருடைப்புண்ணியத்தை
நிலத்தார் போற்றியுணர
காருடை மேகமவளின்
கரிசன கண்ணீர்த் துளியதுவே
நான் கண்டத் துளிகளிலேயே
நலமுறைக்கும் உயர் துளியென
உரைப்பேன்!!..

தமிழ் பிரியன் நசீர்

No comments: