Tuesday, March 20, 2018

நமது வாசிப்பின் நீளம் என்ன :

நமது வாசிப்பின் நீளம் என்ன :
சில தினங்களுக்கு முன் ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் கல்வி குழும செயலர் விழா மேடையில் நின்று திரண்டிருந்த (சுமார் 500) மாணவர்களை பார்த்து கேட்ட கேள்வி .இதை சவால் என்றும் சொல்லலாம்
சமகால பிரச்சனையான "காவிரி நீர் " பற்றிய வரலாற்றை எந்த மாணவர் அல்லது மாணவி இம்மேடையில் இப்பொழுது கூறுவாரோ அவருக்கு 1 லட்சம் இப்பொழுதே தருவதாக சொன்னார்.
ஆனால் எவரும் கூறவில்லை, எனக்கு கூட ஆக அந்த காவிரி வரலாற்றை நாம் தெரிந்து வைத்திருந்தால் 1 லட்சத்தை நாம் பெற்றிருக்கலாமே என்ற ஒரு சபலம் தட்டியது. (ஆனால் அது முடியாது ஏனெனில் அவர் பரிசுப் பொருள் அறிவித்தது மாணவர்களுக்குதான் நானோ அவ்விழாவில் ஒரு அமர்வின் நடுவராக சென்றிருந்தேன்)

தமிழக விவசாயிகள் பிரச்சனை நமக்கெதற்கு என்ற நமது குறுகிய புரிதல் நமது நீராதரத்தின் முக்கியத்துவம் பற்றியும் நமது மாநிலத்தின் முக்கியமான பிரச்சனை பற்றிய தெளிவும் இல்லாமல் ஆக்கி விட்டது.
மாணவர்கள் வாசிப்பு வெறும் பாடபுத்தகங்கள் என்று சுருங்கி விடாமல் வகுப்பறை வெளியே உள்ள உலகத்தை வாசிக்க வேண்டிய அவசியத்தை அங்கே சிலர் புரிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.
யார் கண்டது இந்த மாணவர்களில் எவரேனும் நாளை விவசாய துறை அமைச்சராக கூட வர வாய்பிருக்கிறது.
பிறகு பாராளுமன்றத்தில் காவிரி பற்றி எதையாவது கூற தேவை ஏற்படலாம்.
ஆக வாசிப்போர் எல்லை விசாலமடையட்டும். வாசிக்க நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருப்போர் கவனத்திற்கு நீங்கள் வாசிக்க நூலை கையில் எடுக்கும் நேரமே நல்ல நேரம் ..
(காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில்தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.)

Abdul Rahman

No comments: