Thursday, March 22, 2018

அட்டகாச நறுமண திரவம்


முடை நாற்ற வீச்சமடித்து
மல ஜலம் நிரம்பி சுமக்கும்
புண்கள் ரணமாகி
சிரங்குகளில் சீர்வழியும்
கல்லறை ஈக்கள் மொய்க்கும்
காற்றடைத்த கழிசடை தேகம் !
ஒன்பது வாசல் ஓட்டை மேனிக்கு
உயிரோடு உலவுகையில் 
ஊருப்பட்ட செலவில் 
உல்லாச வாழ்க்கையில் 
உடலெங்கும் தெளித்துக்கொள்ள
ஒப்பனை அறையில்
ஒய்யாரமாய் காத்திருக்கிறது
ஆபரண குப்பியில்
அட்டகாச நறுமண திரவம்

No comments: